Jailer box

ஜெயிலர் விமர்சனம்



ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது ஜெயிலர்!!!

பீஸ்ட் படத்தில் சற்றே சறுக்கிய இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தில் எழுந்து நின்று வெற்றிக்  கொடி நாட்டியுள்ளார்!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தங்க பதக்கம் படத்தின் மாடர்ன் வெர்ஷன்தான் ஜெயிலர்!!!

 முத்துவேல் பாண்டியன் (ரஜினி) ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. அவரது மகன் அர்ஜுன் (வசந்த் ரவி) அசிஸ்டன்ட் கமிஷனராக பணி புரிகிறார். மகன், மருமகள், பேரன் மற்றும் மனைவி என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் முத்துவேல் பாண்டியன். நேர்மையாக இருக்கும் தனது மகனை நினைத்து பெருமிதம் கொள்கிறார். சிலை கடத்தல் கும்பல் ஒன்றை பிடிக்க அர்ஜுன் முற்படுகிறார். அது தொடர்பாக  சீனு (சரவணன்) என்கிற நபரை கைது செய்து விசாரிக்கிறார்.  தனது செல்வாக்கை பயன்படுத்தி சீனு வெளியே வருகிறான்.  சீனு வெளியே வந்த சில நாட்களிலேயே அர்ஜுன் காணாமல் போகிறார். அர்ஜுனை கண்டுபிடிக்க டிபார்ட்மென்ட் உதவியை நாடும் முத்துவேல் பாண்டியனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது . அர்ஜுன் இறந்து விட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. நேர்மை நேர்மை என்று கூறி வளர்த்து நமது மகன் இறப்புக்கு நாமே காரணமாகி விட்டோமே என வருந்துகிறார். தனது மகனின் இறப்புக்கு காரணமான சீனுவை கொல்கிறார். தனது பேரனோடு ஐஸ் க்ரீம் சாப்பிடலாம் என்று வெளியே வரும் போது யாரோ அவரது பேரனை கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்கள் இருவரையும் முத்துவேல் பாண்டியன் கொல்கிறார்.  இந்த நெட்ஒர்க்க்கு பின்னால் இருப்பது வர்மன்(விநாயகன்)  என்பதை தெரிந்து கொள்கிறார். வர்மன் நெட்ஒர்க்கையும் அவனையும் முடிக்க தனது பழைய நண்பர்களை முத்துவேல் பாண்டியன் நாடுகிறார். 

வர்மன் ஏவி அனுப்பும் ஆட்களை தனது குழு மூலம் முத்துவேல் பாண்டியன் முடிக்கிறார். வர்மன் நெட்ஒர்க்கையையும் நெருங்குகிறார். ஒரு கட்டத்தில் வர்மன் அர்ஜுன் உயிரோடு இருப்பதாக  முத்துவேல் பாண்டியனிடம் தெரிவிக்கிறான். அர்ஜுனை மீட்க ஒரு ஒப்பந்தம் போடுகிறான் வர்மன். ஆந்திராவில் இருக்கும் கோவில் ஒன்றில் ஒரு பழமையான கிரீடம் இருப்பதாகவும், tight securtiyஐ மீறி அந்த கிரீடத்தை  முத்துவேல் பாண்டியன் தனக்கு எடுத்து கொடுத்தால் அர்ஜுனை விடுவிப்பதாக ஒப்பந்தம் போடுகிறான். அந்த ஒப்பந்தத்திற்கு முத்துவேல் பாண்டியன் ஒப்பு கொள்கிறார். அர்ஜுனை முத்துவேல் பாண்டியன் மீட்டாரா? நேர்மையான அதிகாரியான முத்துவேல் பாண்டியன் எதற்காக அந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்? கிரீடம் கோவிலிலிருந்து எடுக்கப்பட்டதா? வர்மனையும் அவன் நெட்ஒர்க்கையும் முத்துவேல் பாண்டியன் முடித்தாரா? முடிவில் முத்துவேல் பாண்டியனும் அர்ஜுனும் சந்தித்து பேசி கொள்கிறார்கள். அங்கே நடப்பது என்ன? அதுவே ஜெயிலர்.

பலம்:

1. ரஜினியின் Screen prescence. Through his Style and Swag Rajini Rocks the show!!!

2. வில்லன் கதாபாத்திரத்தில் விநாயகன் திறம்பட நடித்துள்ளார்!!! வர்மன் கதாபாத்திரத்தை டெரராக சித்தரித்துள்ளார் இயக்குனர் நெல்சன். என்ன ஏது என்று ஆராயாமல் கண்மூடித்தனமாக தான் சந்தேகிக்கும் நபர்களை கொல்வது, கெஞ்சுனா மிஞ்சுவ மிஞ்சுனா கெஞ்சுவ என்பது போல் முத்துவேல் பாண்டியன் மிஞ்சும் போது அவரிடம் கெஞ்சுவது, முத்துவேல் பாண்டியன் மனைவியிடம்  சிரித்த முகத்துடன்   கெஞ்சிக்கொண்டே பத்து ரூபாய் பிச்சை எடுப்பது & அதற்கு பிறகு வன்மத்தோடு ஆட்களை அனுப்புவது, மகன் உயிருடன்தான் இருக்கிறான் என்பதை முத்துவேல் பாண்டியனிடம் கூறும் போது மீண்டும் மிஞ்சுவது என திறம்பட வர்மா கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார் விநாயகன். 

3. படத்தின் வலிமையான தூணாக அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இருக்கிறது 

4. ஸ்டண்ட் சிவாவின் சண்டை & ஆக்ஷன் காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளன.  

5. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு அருமை.

6. கதாபாத்திரங்கள் திறம்பட கையாளப்பட்டிருக்கின்றன!!!

வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், ரித்விக் நன்றாக நடித்துள்ளார்கள். காட்சிக்கு தேவைப்படும் நடிப்பை ரம்யாகிருஷ்ணன் மற்றும் மிர்னா மேனன் வெளிப்படுத்தியுள்ளனர். ரித்விக் க்யூட். அர்ஜுன் கதாபாத்திரத்தில் வசந்த் ரவி நன்றாக நடித்துள்ளார்.

யோகி பாபு, VTV Ganesh,ரெடின் கிங்ஸ்லீ, சுனில், சுனில் ரெட்டி மற்றும் தமன்னா காமெடியில் ஸ்கோர் செய்கிறார்கள்.

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் நாக பாபு, அறந்தாங்கி நிஷா, அர்ஷத், மாரிமுத்து, ஜாபர் சாதிக், கிஷோர், சரவணன், Billy முரளி போன்றோர் தங்களது ஸ்கோப்பில் நன்றாக நடித்துள்ளனர்.

7.சுனில், தமன்னா ,சுனில் ரெட்டி மற்றும் ரெடின் கிங்ஸ்லி  நகைச்சுவை காட்சிகள் திரைக்கதையின் தீவிரத்தை சற்றே தளர்த்துகின்றன.

8. சிவராஜ்குமார், மோகன்லால் மற்றும் ஜாக்கி ஷரப் போன்றோர் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவர்கள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

9. காவாலா பாடலில் தமன்னா நன்றாக நடனமாடியுள்ளார். Good Choreography by Johnny Master.

10. ஆர். நிர்மலின் படத்தொகுப்பு திரைக்கதையை தொய்வின்றி நகர்த்துகிறது.

11. ஹீரோவே எல்லாவற்றையும் செய்வது போல அபத்தமாக காட்சிப்படுத்தாமல், அவர் ஒரு குழுவை வைத்துக்கொண்டு காய்களை நகர்த்துவது போன்று காட்சிப்படுத்தியிருப்பது லாஜிக்கலாகவும் நம்பும்படியும் இருந்தது. Director Nelson has tried to balance Action and Humour in the screenplay. It has worked out.
As a Final output, Jailer has come out as a Mass Entertainer.

12.  கலை இயக்குனர் கிரணின் கலை வடிவமைப்பு நன்றாக இருந்தது. உதாரணத்திற்கு, படத்தில் காண்பிக்கப்படும் முத்துவேல் பாண்டியனின் வீடு மற்றும் வர்மா இருப்பிடம் செட் ஒர்க். 

13. ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனை நன்றாக இருந்தது,குறிப்பாக ரஜினிக்கு.

பலவீனம்:

1. படத்தின் நீளம். இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் ஜெயிலர் ஓடுகிறது. நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

2. சிவராஜ்குமார், மோகன்லால் மற்றும் ஜாக்கி ஷரப்பின் பின்னணி என்ன என்பது ஆழமாகவோ அல்லது அழுத்தமாகவோ பதிவு செய்யப்படவில்லை. அதன் காரணமாக அவர்களது கதாபாத்திரங்கள் பெரிதாக ஒட்டவில்லை.

3. ஒரு Assistant commissioner காணாமல் போகிறார்.  அதனை டிபார்ட்மென்ட் எப்படி கண்டும் காணாமல் விடுகிறது என்கிற கேள்வி எழுகிறது. பொதுவாக இது போன்ற சூழலில் டிபார்ட்மென்ட் தீவிரமாக செயல்படுவார்கள்.

Overall, A Mass Entertainer from Director Nelson!!! Celebration time for Rajini fans!!!

Maximum Ratings: 3.75 * stars
Minimum Ratings: 3.5* stars
Score card: 70 to 60/100
Value: Excellent to Very Good 

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre


Rathamarey

A Song that may portray the Happiness of  Muthuvel Pandian Family in Jailer. 

A Beautiful song in Vishal Mishra voice. Beautifully written by Vignesh shivan. Beautifully composed by Anirudh.



Showcase 


Age is just a number. Rajini Rocks through his style and swag even at this age (72 years). Jailer showcase is Impressive. Eagerly waiting to watch Jailer.

Jujubee 

Sounds like Jujubee may come for a revenge situation in Jailer. Dhee has sung energetically and beautifully.

Hukum 


"உன் அலும்ப பாத்தவன்... உங்கொப்பன் விசில கேட்டவன்... உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்". ரஜினிக்கேற்றவாறு மாஸாக வரிகளை அமைத்துள்ளார் சூப்பர் சுப்பு . ரஜினிக்கு அறிமுக பாடலாகவோ அல்லது பின்னணி இசையாகவோ Hukum வரலாம்.

Kaavaalaa

Anirudh Music is cool. Shilpa Rao voice is glamorous. Kaavaalaa is cool and glamorous.


Filming completed




 
Release date

Super Star Rajinikanth,Mohan Lal,Jackie Shroff,Shiva Raj Kumar,Sunil,Ramya Krishnan,Vinayakan,Mirna Menon, Tamannah,Vasanth Ravi, Nag Babu, Jaffer Sadiq, Yogi Babu,Marimuthu, Namo Narayana,Rithvik, Saravanan, Aranthangi Nisha,Mahanadhi Shankar & Kalai Arasan...

 Big and interesting casting.  

Eagerly waiting for Jailer.

 Muthuvel Pandian arrives


Intro of Rajini as Muthuvel Pandian from Jailer. Stylish

Title and First Look 





Title of Rajini's 169th film is Jailer.

 First look of Jailer.


Rajini 169



Rajini+ Nelson+ Anirudh is an interesting combination. Eagerly waiting for Rajini 169.

Comments