Viruman box

                                Viruman



விருமன் படத்தை குடும்பத்துடன்     காணலாம் 👍👍👍 

தன் அம்மாவின் இறப்பிற்கு தந்தை காரணமாக இருக்க, சிறு வயதிலிருந்தே தனது தந்தையை வெறுக்கிறார் விருமன். தனது தாய் மாமனோடு வாழ்ந்து வருகிறார். விருமனுக்கும் அவர் தந்தைக்கும் எப்போதும் மோதல் எழுகிறது...ஆங்காங்கே இருவருக்கும் இடையே சண்டை வருகிறது.  

தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான கதை...தனது தந்தையை  மகன் திருத்தி மாற்றினாரா? தனது மகனை தந்தை புரிந்து கொண்டாரா? அதுவே விருமன்.

கார்த்தி, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், அதிதி ஷங்கர் , வடிவுக்கரசி, ஆர் கே சுரேஷ் & கருணாஸ்  நன்றாக நடித்துள்ளனர்.   

அதிதி ஷங்கருக்கு நல்ல அறிமுகம். Good Debut. Good performance within her scope. சூரியின் காமெடி எடுபடுகிறது.

பின்னணி இசை நன்று.  கஞ்சா பூவு கண்ணால படத்தின் ஹைலைட் பாடல்

ஆணவம்... ஆணாதிக்கம்.... தான் சொல்வதும் செய்வதும் எப்போதும்   சரியே என்று நினைக்கிற மனோபாவம்....குடும்பத்தில் தான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும் என்று நினைக்கிற எண்ணம்...மனைவியோடு வாழ்ந்து கொண்டே இன்னொரு பெண்ணோடு  உறவு வைத்துக்கொண்டு "ஆயிரம் இருந்தாலும் நான் ஆம்பள" என்று நினைக்கும் மனோபாவம்..குடும்பத்தில் .தன் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்க கூடாது என்று நினைக்கிற மனோபாவம்..தனது மகனோடு ஏட்டிக்கு போட்டியாக ஆணவத்தோடும் இறுமாப்போடும் நடந்து கொள்ளும் தாசில்தார் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நன்றாக நடித்துள்ளார். 

சரண்யா பொன்வண்ணன், மனோஜ் கே பாரதிராஜா, ஜீ எம் சுந்தர்,சிங்கம்புலி,இளவரசு, ராஜ்குமார்  வசுமித்ரா, O.A.K. ஷங்கர்   மற்றும் பலர் நன்றாக நடித்துள்ளார்கள் 

சூரியின் காமெடி எடுபடுகிறது👍👍👍

எழுபதுகள் எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில், படத்தில் காண்பிக்கப்படும் பிரகாஷ் ராஜ் போன்று  ஆண்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அது போன்ற ஆண்களை பிரதிபலிக்கும் விதமாக விருமன் இருந்தது. 

படத்தின் பலவீனம் நீளம். முதல் பாதியே கிட்டத்தட்ட ஒரு படம் பார்க்கும் உணர்வை கொடுத்தது. இடைவேளை வரும்போது இப்பதான் இடைவேளையே வருதா  என்கிற எண்ணம் எழுந்தது.

சண்டை காட்சிகள் சலிப்பூட்டுகின்றன.

💫மொத்தத்தில் விருமன் படத்தை குடும்பத்தோடு காணலாம்💫 

Maximum Ratings: 3.5 * stars

Minimum Ratings: 3.25* stars.

Score card: 60 to 50/100

Value: Very Good to Good 

New Ratings of Cinemaprabhanjam 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre

2 and < 2 *   stars

10

Worse

Kanja Poovu Kannala


A Village melody in Sid Sriram's voice. Lyrics are beautifully written by Karumathur Manimaran. Beautifully composed by Yuvan Shankar Raja.




Directed by Muthaiah. Second film for Karthi with Muthaiah after Komban. 
Karthi's look in Viruman





Viruman is debut of Aditi Shankar as the Female lead. 

Comments