Yaanai
Yelamma Yela
Arya Dhayal has sung Yelamma Yela beautifully. Chorus is good. Beautifully Picturised.
Overview
வழக்கமான பார்முலா படம்தான். இருந்தாலும், அருண் விஜய் நடிப்பை ரசிக்கலாம். ரவிச்சந்திரன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நன்றாக நடித்துள்ளார். ஒரு பகை மற்றும் ஒரு பிரச்சனையை சுற்றி கதை நகர்கிறது. யோகி பாபுவின் காமெடி எடுபடுகிறது. கதாபாத்திரங்களுக்கு திரைக்கதையில் நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
குடும்பத்துடன் காணலாம்.
Target audiences
*General Audiences
*Family Audiences
Synopsis
Two Fisherman groups...PRV group from Ramanathapuram...Samuthiram Group from Rameshwaram... சமுத்திரத்திற்கு (V.I.S. Jeyapalan) இரண்டு மகன்கள்.. லிங்கம் (Ramachandra Raju) மற்றும் பாண்டி(Ramachandra Raju)...PRVக்கு(Rajesh) இரண்டு மனைவிகள் மற்றும் நான்கு மகன்கள்...முதல் மனைவிக்கு மூன்று மகன்கள்...ராமசந்திரன் (Samuthirakani), சிவச்சந்திரன் (Bose Venkat) & ஜெயச்சந்திரன்(Sanjeev).. இரண்டாம் மனைவிக்கு(Radhika Sarathkumar) ஒரு மகன்...ரவிச்சந்திரன்(Arun Vijay)
ரவிச்சந்திரனின் நண்பன் ஒருவரை பாண்டி கொல்ல அது காவல்துறை முன்பு பஞ்சாயத்து ஆகிறது. PRVயின் நண்பரான சமுத்திரம், பஞ்சயாத்துக்கு PRVயிலிருந்து யாரும் வர வேண்டாம் என கேட்டு கொள்ள முதலில் ஒகே சொல்கிறார் ராமசந்திரன். ஆனால் இறந்த நபர் தனது ஜாதிக்காரர் என்பது தெரிந்தவுடன் பஞ்சாயத்துக்கு செல்கின்றனர் PRV தரப்பு. அங்கே எழும் சலசலப்பால் காவல் துறை பாண்டியை என்கவுண்டரில் போட்டு தள்ள, இறந்த பாண்டியின் சாவுக்கு PRV குடும்பத்தினர்தான் காரணம் என சமுத்திரமும் அவரது மகனான லிங்கமும் நினைக்கிறார்கள். இது இரு குடும்பத்துக்கும் பகையை ஏற்படுத்துகிறது. ஜெயிலுக்கு சென்று திரும்பி வரும் லிங்கம், PRV குடும்பத்தினரை பழி வாங்க வேண்டுமென நினைக்கிறார். இதனிடையே, ராமசந்திரனின் மகள் செல்வி, இஸ்லாமியர் பையன் ஒருவரை காதலித்து ஊரை விட்டே ஓடி போகிறார். செல்வி காதலிப்பது ரவிச்சந்திரனுக்கு தெரியும் என்று செல்வியின் தோழி ஒருத்தி சொல்ல ரவிச்சந்திரன்தான் செல்வி ஓடிப்போவதற்கு காரணம் என ரவியின் அண்ணன்கள் தவறாக நினைக்கின்றார்கள். அவரை வீட்டை விட்டு போக சொல்கின்றனர்...ரவியும் அவரது அம்மாவும் வீட்டை விட்டு செல்கின்றனர்... உண்மையில், செல்விக்கு புத்திமதி சொல்லி அவள் மனதை மாற்றிக்கொள்ளுமாறு ரவிச்சந்திரன் கூறியிருப்பார். ஓடிப்போன செல்வி எங்கே போனாள்?
பழி வாங்க நினைக்கும் லிங்கத்திடமிருந்து தனது குடும்பத்தாரை ரவி காப்பாற்றினாரா? ஜாதி வெறி பிடித்த ரவியின் அண்ணன்கள் செல்வியை ஏற்று கொண்டனரா? ரவிச்சந்திரனை அவரது அண்ணன்கள் புரிந்து கொண்டனரா? ஜெபமலருக்கும்(Priya Bhavani Shankar) ரவிக்கும் இடையிலான காதல் என்னவானது? அதுவே யானை
Info and Messages
* மத கலப்பு திருமணத்தை பல்வேறு கோணங்களில் அலசுகிறது யானை...
வீட்டிற்கு தெரியாமல் ஓடி போய் திருமணம் செய்து கொள்வது குடும்ப கௌரவத்தை பாதிக்கிறது என்பதை யானை பதிவு செய்கிறது....
* ஜாதிய வெறியை விடுவது குறித்து யானை பதிவு செய்கிறது...
Strength:
* அருண் விஜய்யின் நடிப்பு...ஏற்ற இறக்கமாக பேசுவது, வசன உச்சரிப்பு, வீரம், கம்பீரம், காதல் & பாசமென பல்வேறு உணர்வுகளை ரவிச்சந்திரன் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்துகிறார் அருண் விஜய்.நெல்லை தூத்துக்குடி வட்டார மொழியில் பேசி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அருண் விஜய். யானை படத்தை அருண் விஜய் தனது தோளில் தாங்கியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். பார்முலா படமாக இருந்தாலும் அருண் விஜய்யின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. அருண் விஜய்யிடமிருந்து நல்ல நடிப்பை வாங்கியுள்ளார் இயக்குனர் ஹரி.
* யோகி பாபுவின் காமெடி எடுபடுகிறது. முதல் ஒன்றிரண்டு காட்சிகள் எடுபடாவிட்டாலும் கதை நகரும் போது யோகி பாபுவின் காமெடி நன்றாக எடுபடுகிறது. யோகி பாபுவின் காமெடி திரைக்கதை தொய்வின்றி நகர்வதற்கு உறுதுணையாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். யோகி பாபுவின் திறமையை இயக்குனர் ஹரி நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்.
* Good performance from Priya Bhavani Shankar. She has performed well within her scope.
*அம்மு அபிராமி கதையில் ஓர் முக்கிய கதாபாத்திரம். செல்வி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். குடும்பத்தின் செல்ல பெண். ரவி செல்வியை கண்டுபிடிக்கும்போது உடைந்து போய் அழுகின்ற இடத்தில் அம்மு அபிராமி நன்றாக நடித்துள்ளார்.
*பெயரளவுக்கு என்றில்லாமல், கண் துடைப்பு என்றில்லாமல் படத்தில் நடித்த நடிகர்களுக்கு இயக்குனர் ஹரி நல்ல முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ராஜேஷ், ராதிகா, சமுத்திரக்கனி,போஸ் வெங்கட், சஞ்சீவ், ஐஸ்வர்யா மற்றும் பலர் நன்றாக நடித்துள்ளனர்.
*வில்லன் தரப்பில் ராமச்சந்திர ராஜு மற்றும் வீ. ஐ. எஸ் ஜெயபாலன் நன்றாக நடித்துள்ளார்கள்.
*ராமேஸ்வரத்தை அழகாக படம் பிடித்து காட்டும் கோபிநாத்தின் ஒளிப்பதிவு நன்று.
*கதை களத்திற்கேற்ற இசையை ஜீவி பிரகாஷ் கொடுத்துள்ளார். நன்று.
*சண்டை காட்சிகள் நன்று
பலவீனம்:
* பார்முலா படம் என்பதால் கதையின் போக்கு சற்று ஊகிக்கும்படி உள்ளது
* இயக்குனர் ஹரி இதற்கு முன் இயக்கிய படங்களை ஆங்காங்கே யானை நினைவுபடுத்தியது. அரைத்த மாவையே மீண்டும் வேறொரு கோணத்தில் அரைத்தது போன்று இருந்தது.
* வில்லனுக்கும் ஹீரோவுக்கும் இடையிலான காட்சிகள் சற்று mind games போன்று அமைக்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
Overall, a Family Entertainer from Director Hari.
Maximum Ratings: 3.25 * stars
Minimum Ratings: 3* stars
Score card: 50 to 40/100
Value: Good to watchable
Ratings of Cinemaprabhanjam
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
2 and < 2 * stars | 10 | Worse |
Trailer
Looks like a Family story that happens in Rameshwaram.
Comments
Post a Comment