Kanguva box

கங்குவா விமர்சனம் 



2024 மற்றும் 1070ல் கதை நடக்கின்றது. 

2024

 மூளை மேம்பாடு மற்றும் புற உணர்ச்சி சக்தி தொடர்பான (Extra sensory powers) ரகசிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஓர் ரஷ்ய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகத்திலிருந்து Zeta என்னும் சிறுவன் தப்பிக்கிறான்.  Francis (சூர்யா) 1070ல் வாழ்ந்த கங்குவாவின் மறுபிறப்பு என்பதை அறிந்த சிறுவன் Zeta Francisஐ  நெருங்குகிறான். Bounty Hunterஆக இருக்கும் Francis அந்த சிறுவனை நோக்கும் போது அவருக்கு முன் ஜென்மத்து ஞாபகங்கள் வருகின்றது. ஆராய்ச்சி ஆய்வகத்தை சேர்ந்த காவலர்கள் அந்த சிறுவனை மீண்டும் ஆய்வகத்துக்கு தூக்க முயலுகின்றனர். அவர்களிடமிருந்து Francis அந்த சிறுவனை மீட்டாரா? 

1070 

ஐந்தீவு என்னும் பகுதி. ஐந்து தீவுகள்.. முக்காட்டர், மண்டான்கர், வெண்காட்டர், அரத்தி மற்றும் பெருமாச்சி என ஐந்து இனக்குழுக்கள் ஒவ்வொரு தீவிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஐந்தீவின் இனக்குழுக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணமாகவும் ஐந்தீவின் பலமாகவும் பெருமாச்சி இனக்குழு இருக்கிறது. பெருமாச்சியின் பலமாக கங்குவா (சூர்யா) இருக்கிறார். இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என நினைக்கும் ரோமானியர்கள் முதலில் ஐந்தீவை குறி வைக்கிறார்கள். இருபத்தி ஐயாயிரம் வீரர்களோடு கடலில் கப்பல்களில் காத்திருக்கிறார்கள். ஐந்தீவை சேர்ந்த கொடுவன் (நடராஜன்) மற்றும் மியாசன் (போஸ் வெங்கட்) தங்க காசுகளுக்காக ரோமானியர்களிடம் விலை போகிறார்கள்.. ஐந்தீவின் பலமாக இருக்கும் பெருமாச்சியை முதலில் வீழ்த்த வேண்டும் என்று யோசனை கொடுக்கும் கொடுவன் பெருமாச்சி இன மக்களை அழித்துவிட்டு வருகிறேன் என கூறி செல்கிறான்.  கங்குவாவின் தந்தை பெருமாச்சி இனத்தின் அரசராகவும் தலைவராகவும் இருக்கிறார். அவரை சந்திக்கும் கொடுவன் தனக்கு ஓர் காரியமாக நூறு பெருமாச்சி வீரர்கள் வேண்டும் என கூறி நூறு வீரர்களை கூட்டி சென்று அவர்களை ரகசியமாக கொல்கிறான். நூறு வீரர்களில் ஒருவர் (கருணாஸ்) மட்டும் தப்பித்து கொடுவனின் சதியை அரசரிடமும் கங்குவாவிடமும் தெரிவிக்கிறார். தன்னுடைய இடத்தில் வீரர்கள் பத்திரமாக இருப்பதாகவும்  தனக்கு இன்னும் நூறு வீரர்கள் வேண்டும் என மறுபடியும் கொடுவன் கூற, மேலும் நூறு வீரர்களை அனுப்பி வைக்கிறார் அரசர். ஏற்கனவே 99 வீரர்களை கொன்ற கொடுவன் அதே பாணியில் நூறு வீரர்களை கொல்லலாம் என்று நினைக்க கொடுவனின் சதியை கங்குவா முறியடிக்கிறார். கொடுவனின் துரோகத்தை பெருமாச்சி இனத்திற்கு அம்பலப்படுத்துகிறார் கங்குவா. கொடுவனை அனைவரின் முன்பும் எரித்து கொல்கிறார். கொடுவனுக்கு பொருவா என்னும் ஓர் மகன். பொருவனை காக்குமாறு கொடுவனின் மனைவி கங்குவாவிடம் சத்தியம் வாங்குகிறார். சத்தியம் வாங்கிவிட்டு கொடுவனின் மனைவி உடன்கட்டை ஏறி இறந்து போகிறார். பெருமாச்சி இனமே துரோகியின் மகனான பொருவாவை ஏற்க மறுக்கிறது. அனாதையாக இருக்கும் பொருவாவை கங்குவா காக்கிறார். பெருமாச்சி இனத்தை அழிக்க நினைத்த கொடுவன் இறந்ததால், பெருமாச்சியை வீழ்த்த ரோமானியர்களை அரத்தி இனத்தோடு நட்பு பாராட்ட சொல்கிறான் மியாசன். பெருமாச்சிக்கும் அரத்திக்கும் ஏற்கனவே முன்பகை இருப்பதாலும் ரோமானியர்கள் தங்க காசு அளிப்பதாலும் பெருமாச்சி மீது குறிப்பாக கங்குவா மீது போர் தொடுக்க சம்மதிக்கிறான் அரத்தி இனத்தின் தலைவன் உதிரன்(பாபி டியோல்). இரக்கமற்ற போர் யுக்திகளை கையாள்பவர்கள் அரத்தி இன மக்கள், குறிப்பாக உதிரன். கங்குவாவை கொல்ல தனது மகன்களை அனுப்புகிறான் உதிரன். தனது தந்தையான கொடுவனை கங்குவா கொன்றதாலும்  தனது தாயும் இறந்து போனதாலும் கங்குவாவை  பழி தீர்க்க பொருவா போரின் இடையில் கங்குவாவை கத்தியால் குத்தி செல்கிறான். அந்த காயத்திலிருந்து மீண்டு வரும் கங்குவா உதிரன் அனுப்பிய படையை எதிர்கொண்டு ஜெயிக்கிறார். 

போரில் கங்குவா ஜெயித்தாலும் கங்குவாவை கொல்ல முயன்ற பொருவாவை கொல்ல வேண்டும் என பெருமாச்சி மக்கள் துடிக்கின்றனர். தான் செய்து கொடுத்த சத்தியத்திற்காக பொருவாவை காப்பேன் என கூறுகிறார் கங்குவா. பெருமாச்சி அரசர் ஓர் உத்தரவு போடுகிறார். கங்குவாவை கொல்ல முயன்ற காரணத்திற்காக பொருவாவை நான்கு நாட்கள் கருங்காட்டிற்கு அனுப்ப வேண்டும் எனவும், நான்கு நாட்கள் கழித்து பொருவா உயிரோடு வந்தால் அவரை பெருமாச்சி ஏற்று கொள்ளும் எனவும் உத்தரவு போடுகிறார். கொடிய மிருகங்கள் இருக்கும் கருங்காட்டில் பொருவனை தனியாக அனுப்புவது சரியாக இருக்காது என்றும், தான் செய்து கொடுத்த சத்தியத்திற்காக பொருவனை காப்பேன் என கூறும் கங்குவா பொருவனோடு தானும் கருங்காட்டிற்கு செல்கிறார். அந்த நான்கு நாட்களில் கங்குவாவிற்கும் பொருவாவிற்கும் நல்ல நட்பு மற்றும் பந்தம் ஏற்படுகிறது. பொருவாவை முதலையிடமிருந்து கங்குவா காக்கிறார். கங்குவா நல்லவர் என்பதையும் தன்னை கங்குவா காக்கிறார் என்பதையும்  உளமார புரிந்து கொள்கிறான் பொருவன். கங்குவா பெருமாச்சியில் இல்லை என்பதை தெரிந்து கொள்ளும் அரத்தி வீரர்கள் பெருமாச்சி பெண்களை தாக்க முயலுகிறார்கள். குறிப்பாக, உதிரனின் மூன்றாவது மகன். தங்களை வீரர்கள் தாக்க வருகிறார்கள் என்பதை அறியும் பெருமாச்சி பெண்கள் சமிஞை மொழி மூலம் கங்குவாவை தொடர்பு கொள்கிறார்கள். கருங்காட்டில் இருக்கும் கங்குவா சமிஞை மொழி மூலம் பெருமாச்சி பெண்களுக்கு வீரமும் ஊக்கமும் அளிக்கிறார். வீரத்தோடு உதிரனின் மகனையும் அரத்தி வீரர்களையும் பெருமாச்சி பெண்கள் வீழ்த்துகிறார்கள். தனது மூன்றாவது மகன் இறந்து விட்டான் என்னும் செய்தி உதிரனுக்கு செல்கிறது. கங்குவா மீது போர் தொடுக்கிறான் உதிரன். ஐநூறு வீரர்களை கருங்காட்டிற்கு அனுப்புகிறான். போர் யுக்திகள் மூலம் ஐநூறு பேரையும் வீழ்த்துகிறார் கங்குவா. கங்குவாவிற்கு பொருவன் உதவி செய்கிறான். கங்குவா பெருமாச்சியில் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசரை கொல்கிறான் உதிரன். இறப்பதற்கு முன்பு கழுகு ஓலை மூலம் கங்குவாவிற்கு செய்தி அனுப்புகிறார் அரசர். செய்தி பெற்ற கங்குவா உதிரனை கப்பலில் எதிர் கொள்கிறார். உதிரன் பொருவாவை கங்குவா முன்பு கொல்ல முயலுகிறான். இதனால் கங்குவா பலவீனமாகிறார். நான் இறந்தால் நான் மட்டும்தான் இறப்பேன். கங்குவா இறந்தால் அவரது இனமே அழிந்து விடும் என்று நினைக்கும் பொருவன் பலவீனமான கங்குவாவை மீட்டெடுக்க கங்குவா முன்பே தற்கொலை செய்து கொள்கிறார். மீண்டு வரும் கங்குவா உதிரனை கொல்கிறார். மூன்று மகன்களும் இறக்க உதிரனும் இறக்க, இனி அரத்தி இனத்தை யார் ஆள்வார்கள் என அரத்தி மக்கள் பேச அங்கே ரத்தாங்கேசன் (கார்த்தி) வருகிறார். ரத்தாங்கேசன் உதிரனின் வைப்பாட்டி மகன். கங்குவாவை கொன்றுவிட்டுதான்  அரியாசனை ஏறுவேன் என சபதமிடுகிறார் ரத்தாங்கேசன். அதோடு 1070 ன் கதை முடிகிறது

1070ல் பொருவனாக கங்குவாவோடு பயணித்த சிறுவன்தான் தற்காலத்தில்  Zetaவாக மீண்டும் பிறந்திருக்கிறான். 1070ல் வாழ்ந்த கங்குவாவாதான் மீண்டும் Francis ஆக மறுபிறவி எடுத்திருக்கிறார். 2024ல் Francis Zetaவை மீட்டாரா? என்பதுதான் கங்குவா முதல் பாகத்தின் கதை. 

முன் ஜென்மத்தில் வாழ்ந்த ரத்தாங்கேசன் 2024ல் ரஷ்ய ஆய்வகத்தில் Commander Ryan ஆக பணி புரிகிறார். Francisஐயும் Zetaவையும் தூக்க நினைக்கிறார். Francis மற்றும் Commander Ryan இரண்டாம் பாகத்தில் மோதி கொள்ள போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு முதல் பாகம் முடிவடைகிறது. 

பலம்: 

1. வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவு பலம் 

2. 1070ல் நடக்கும் காட்சிகளுக்கான ஆடை வடிவமைப்பு பலம் 

3. 1070ல் நடக்கும் காட்சிகள் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.  1070ல் வரும் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக படமாக்கப்பட்டுள்ளன.

4. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை பலம். 

5. ரத்தாங்கேசனாக வரும் கார்த்தியின் அறிமுக காட்சி பலம் 

6. Commander Ryan மற்றும் Francis, கங்குவா மற்றும் ரத்தாங்கேசன் மோதி கொள்ள போகிறார்கள். அது இரண்டாம் பாகமாக வெளிவரும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது பலம். சூர்யாவும் கார்த்தியும் இணைந்து எப்போது ஒன்றாக நடிக்க போகிறார்கள் என்கிற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இரண்டாம் பாகம் வரலாம் என்கிற எதிர்பார்ப்பை கங்குவா ஏற்படுத்தியுள்ளது . 

7. கங்குவாவாக சூர்யா நன்றாக நடித்துள்ளார்.

8. சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் போஸ் வெங்கட் மற்றும் நடராஜன் நன்றாக நடித்துள்ளனர். நரித்தனத்தின் மொத்த உருவமாக மியாசன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.. அவர்களது இருவரின் கதாபாத்திரமும்  30 வெள்ளி காசுகளுக்காக இயேசுவை காட்டிக்கொடுத்த ஜூடாஸை நினைவுப்படுத்தியது .  

9. பெருமாச்சி பெண்கள் போர் செய்யும் காட்சி நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. 

10. சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் கருணாஸ் நன்றாக நடித்துள்ளார். 

11. காட்சி விளைவுகள் (Visual Effects) நன்றாக இருக்கின்றன. 3Dயில் பார்க்க கங்குவா நன்றாக இருக்கின்றது.

பலவீனம்:

1. முதல் 20ல் இருந்து 30 நிமிடங்கள் சொதப்பல். Francis ஆக வரும் சூர்யாவின் காட்சிகள்  ஒட்டவில்லை. 

2. Flashback முடிந்து வரும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி அபத்தமாக இருந்தது. இரண்டு குண்டுகள் துளைத்தும் Francis சர்வசாதாரணமாக ஓடுகிறார். விமானத்தின் நுனியில் நின்று கொண்டு சிறுவனை காப்பாற்ற முற்படுகிறார். முடிவில் காப்பாற்றுகிறார். It was absurd and wasn't convincing. 

3. பெருமாச்சி இனத்தையே தங்க காசுகளுக்காக அழிக்க நினைத்த துரோகியின் மகனை கங்குவா ஏன் காப்பாற்ற வேண்டும்? அதற்கான காட்சிகள் பலமாக இல்லாதது படத்தின் மிக பெரிய பலவீனம். There wasn't much emotional connect...கொடுவனின் மனைவிக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக அவரது பிள்ளையை கங்குவா காக்கிறார் என்கிற லாஜிக் ஓகேதான் என்றாலும், துரோகியின் மனைவிக்கு கங்குவா எதற்காக சத்தியம் செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. துரோகியின் மகனிற்கு கங்குவா பாசம் காட்டுகிறார். ஒட்டவில்லை. ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. முதல் 30 நிமிடங்கள் சொதப்பலாக இருந்தாலும், கடைசி இருபது நிமிடங்கள் அபத்தமாக இருந்தாலும் படத்தின் மையக்கரு பலமாக இருந்திருக்க வேண்டும். படத்தின் மையக்கரு பலவீனமாக இருக்கிறது. அதுதான் கங்குவா படத்தின் மிகப்பெரிய பலவீனம். 

4. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் கே.எஸ். ரவிக்குமார் போன்ற திறமையான கலைஞர்கள் சரியாக பயன்படுத்தப்படாதது படத்தின் பலவீனம். 

5. திஷா பட்டானியின் கதாபாத்திரம் ஒட்டவில்லை. 

6. உதிரனாக வரும் பாபி டியோலின் கதாபாத்திரம் வலுவாக வடிவமைக்கப்படவில்லை.

மொத்தத்தில், 1070ல் வரும் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது. அதற்காகவும் சூர்யாவிற்காகவும்  கங்குவாவை பார்க்கலாம்.

Maximum Ratings: 3 * stars

Minimum Ratings: 2.75 *stars

Score card: 40 to 30/100

Value: Watchable to Middling

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre



Kanguva Short Review


சொதப்பல்... அசத்தல்... அபத்தம்...

2024ல் Francis ஆக வரும் சூர்யாவின் காட்சிகள் சொதப்பல்...

1070ல் கங்குவாவாக வரும் சூர்யாவின் காட்சிகள் அசத்தல்...ஹாலிவுட் படங்களுக்கு நிகராக கங்குவா படமாக்கப்பட்டுள்ளது.... 

Flashback முடிந்து இறுதியில் வரும் சண்டை காட்சி அபத்தமாக இருந்தது...இரண்டு குண்டுகள் Francis ஐ துளைக்கின்றன. அந்த நிலையிலும் அவர் வேகமாக ஓடுகிறார். சண்டை போடுகிறார். குண்டடிபட்டும் விமானத்தின் நுனியில் தொங்கியபடியே சிறுவனை காப்பாற்ற முற்படுகிறார். முடிவில்  காப்பாற்றுகிறார். அபத்தமான காட்சிகள். 

கங்குவா மோசமாக இல்லை...

அதே நேரத்தில் ஆஹா ஓஹோ என்று பேசுமளவிற்கு  இல்லை...

1070ல் நடக்கும் காட்சிகளுக்கு கொடுத்த மெனக்கெடல்களை 2024ல் நடக்கும் காட்சிகளுக்கும் கொடுத்திருந்தால் கங்குவா தமிழ் சினிமாவின் பெருமையாய் இருந்திருக்கும்.

1070ல் வரும் காட்சிகளுக்காகவும் சூர்யாவிற்காகவும் பார்க்கலாம். 

மொத்தத்தில் சொதப்பல்...அசத்தல்... அபத்தம்!!!

Maximum Ratings: 3 * stars

Score card: 40/100

Value: Watchable

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre

Kanguva Release Trailer


Looks like story would move between Past and Present timelines. Trailer looks Magnificent. Eagerly waiting for Kanguva. 

Mannippu 


A Beautiful song on forgiveness 

Thalaivane 


A Song in praise of a Leader.

Yolo


A Party cum Romantic song in Devi Sri Prasad & Lavita Lobo voice. 

Trailer

 பிரம்மாண்டமாக உள்ளது. பழங்குடியினரின் கதையாக கங்குவா இருக்கலாம் என்பது ட்ரைலரில் தெரிகிறது. 

Fire song 


தமிழ் இனத்தின் பெருமையை பதிவு செய்யும் பாடலாக இருக்கிறது Fire song. 

Release date poster 

Kanguva is getting released on October 10th. 

Tamil New Year Poster


One in the past. One in the Future. Looks like Suriya is playing Dual role in Kanguva.

 Teaser


கங்குவா பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது டீசரில் தெரிகிறது. Eagerly waiting to watch Kanguva.

Bobby Deol look as Udhiran 


Ruthless. Powerful. Unforgettable🗡️

Bobby Deol look as Udhiran. Bobby Deol could be a Villain/Antagonist in Kanguva. 

Second look 


Second look of Kanguva.

Glimpse


ஆதிவாசி காலக்கட்டத்தில் நடைபெறும் கதையாக கங்குவா இருக்கலாம் என்பது Glimpseல் தெரிகிறது. கங்குவா பிரம்மாண்டமாக இருக்கும் என்பது Glimpseல் தெரிகிறது.  

Motion Poster 




Title of Suriya 42 is Kanguva 



Motion Poster of Suriya 42 is Impressive. 

Comments