Bakasuran box

 பகாசுரன் 

Review



பகாசுரன் படம் பார்க்கும் சில பார்வையாளர்களுக்கு இந்த மாதிரியெல்லாம் சமூகத்தில் நடக்குதா என்கிற கேள்வி எழலாம்.  நாம் அன்றாடம் செய்திகளில் படிக்கும் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி.


* காதல் என்கிற மாய வலையை விரித்து இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்களை  பற்றி பகாசுரன் பதிவு செய்கிறது

*Virtual prostituion குறித்து பகாசுரன் பதிவு செய்கிறது.

* கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள், correspondent, Hostel warden போன்றோர் மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது அல்லது கல்லூரி பெண்களை அந்தரங்கத்துக்கு அழைப்பது குறித்து பகாசுரன் பதிவு செய்கிறது.

* மாணவிகளின் ஏழ்மையை பயன்படுத்தியோ அல்லது blackmail செய்தோ அவர்களை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்துவது குறித்து பகாசுரன் பதிவு செய்கிறது. private videosஐ வைத்து மாணவிகளை blackmail செய்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது குறித்து பகாசுரன் பதிவு செய்கிறது. 

*Dating apps & classified appsல் இருக்கும் ஆபத்துகள் குறித்தும், அது போன்ற appsஐ பயன்படுத்தி prostitution networks எப்படி செயல்படுகிறதென்பதை பகாசுரன் பதிவு செய்கிறது.

* தற்காலத்தில் பகாசுரன் என்பது யாரோ ஓர் நபரல்ல...அது செல்போன்தான் என்பதை இயக்குனர் மோகன் ஜி பதிவு செய்துள்ளார்.  கதவை சாத்திக்கொண்டு பிள்ளைகள் மொபைல் போனில் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க 
வேண்டும்  என்பதை பகாசுரன் பதிவு செய்கிறது. பிள்ளைகள் குறிப்பாக பெண்கள், பெற்றோரிடம் வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொள்ளவேண்டும் என்பதை பகாசுரன் பதிவு செய்கிறது.


ஒரு பக்கம் கொலைகள்...இன்னொரு பக்கம் investigative journalism என திரைக்கதையை நகர்த்துகிறார் இயக்குனர் மோகன் ஜி.

செல்வராகவன் ,நடராஜ்/ Natty மற்றும் தாராக்ஷி key performers.

கே. ராஜன், ராதா ரவி, குட்டி கோபி, அருணோதயன், தேவதர்ஷினி, P.L. தேனப்பன்,கூல் சுரேஷ், சசி லயா, Pondy ரவி, லாவண்யா போன்றோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளார்கள்.

சாம் சி. எஸ். பின்னணி இசை நன்று.

சிவ சிவாயம் மற்றும் ஆனந்தம் கூத்தாடும் படத்தின் ஹைலைட் பாடல்கள்.

Mansoor Ali Khan appears in a cameo for Kaathama song.

பரூக் ஜே. பாஷாவின் ஒளிப்பதிவு நன்று.
மிரட்டல் செல்வாவின் சண்டை காட்சிகள் நன்று.
S. தேவராஜின் படத்தொகுப்பு நன்று.

பலவீனம்:

1. சில இடங்களில் நடிப்பு கொஞ்சம் செயற்கைத்தனமாக இருந்தது. உதாரணத்திற்கு, அருள்வர்மனின் உறவினர்கள் அழும் காட்சி...
2. படம் கொஞ்சம் violent &  சில காட்சிகள் பார்வையாளர்களுக்கு  சற்றே uncomfortableலாக இருக்கலாம். அதே நேரத்தில் படத்தில் தேவையற்ற  vulgarity & obscenity ஏதும் இல்லை. கதைக்கேற்ற காட்சிகளே படத்தில் உள்ளன.
3. கதையும் களமும் வேறாக இருந்தாலும் பகாசுரன், இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த நான் சிகப்பு மனிதன் படத்தை நினைவூட்டியது. அங்கே பாக்யராஜ் வழக்கை விசாரிப்பார்...இங்கே நடராஜ் வழக்கை விசாரிக்கிறார்...அங்கே ரஜினி கொலைகளை செய்வார். இங்கே செல்வராகவன்  கொலைகளை   செய்கிறார்...Although the story and screenplay are different from each other, Bakasuran has similar pattern with நான் சிகப்பு மனிதன்
4. old wine in new bottle என்பதை போல வழக்கமான பழி வாங்கும் கதையாக பகாசுரன் இருப்பது பலவீனம். அதே நேரத்தில், எளியோரின் வலியை பதிவு செய்யும் படைப்பாகவும் பகாசுரன் இருக்கிறது...

மொத்தத்தில், சமூக நிகழ்வுகளை பதிவு செய்யும் படைப்பாக பகாசுரன் இருக்கிறது.


Maximum Ratings: 3.5 * stars
Minimum Ratings: 3.25 * stars
Score card: 60 to 50/100
Value: Very Good to Good 

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre


Trailer



Personal services Apps தவறாக பயன்படுத்தப்படுவது பற்றியும், ஒழுக்க நெறி பற்றியும் பதிவு செய்யும் படைப்பாக பகாசுரன்  இருக்கலாம் என்கிற எண்ணம் ட்ரைலரை பார்க்கையிலே எழுகிறது.


Siva Sivayam




A Beautiful Devotional song on Lord Shiva...

மெய் சிலிர்க்க வைக்கும் இசை& பாடல்

Good composition from Sam C.S.

Comments