Kalagathalaivan box

 கலகத்தலைவன் 



கலகத்தலைவன்

வஜ்ரா என்னும் ஆட்டோமொபைல் நிறுவனம் Turbidor என்னும் கனரக வாகனத்தை சந்தையில் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்கிறது. குறைவான மைலேஜ் தரும் கனரக வாகனம் என்று விளம்பரப்படுத்தி சந்தையில் அறிமுகம் செய்ய முற்படுகிறது. வண்டியை சோதனை செய்து பார்க்கும் போது விதிக்கப்பட்ட மாசு கட்டுப்பாட்டு அளவை விட Turbidor வண்டி வெளியேற்றும் புகை அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பது தெரிகிறது. இந்த விவரத்தை கம்பெனி ரகசியமாக வைத்திருக்க நினைக்கையில், அதை யாரோ மீடியாவுக்கு தெரியப்படுத்துகிறார்கள். இந்த விவரத்தை கசித்த Whistle blower யார் என்பதை கண்டுபிடிக்க வஜ்ராவின் நிறுவனர் ஒரு குழுவை அமைக்கிறார்....அந்த குழுவின் தலைவன் அர்ஜுன் (ஆரவ்)... அந்த குழு சட்டவிரோதமான முறைகள் மூலம் விவகாரத்தை கையாளுகிறார்கள்....கம்பெனி ரகசியங்களை யார் கசித்தார்கள் என்பதை விசாரித்து அந்த நெட்ஒர்க்கில் உள்ள ஒவ்வொரு நபரையும் கொல்கிறார்கள்... விவரத்தை கசித்த Whistle blowerஐ நெருங்கினார்களா அந்த குழு... அந்த குழுவிடமிருந்து திருமாறனும் (உதயநிதி) அவரது குழுவும் தப்பினார்களா? திருமாறன் ஒரு Whistle blower... அவர் ஏன் கம்பெனி ரகசியங்களை கசிந்தார்? அதுவே கலகத்தலைவன்.

Whistle blowers மற்றும் corporate traitorsக்கும் இடையிலான வித்யாசத்தை கலகத்தலைவன் பதிவு செய்கிறது.

கம்பெனியில் நடக்கும் முறைகேடு அல்லது தவறை வெளியே கொண்டு வர நினைப்பவர்கள் Whistle blowers.

உதாரணத்திற்கு, உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இருக்கிறதென்று வைத்து கொள்வோம். உணவு தயாரிப்பில் புற்று நோய் விளைவிக்கக்கூடிய நச்சு பொருள் சேர்க்கப்படுகிறது என வைத்து கொள்வோம். அதனை கம்பெனி ரகசியமாக வைத்திருக்கிறது. பொது நலன் கருதி அந்த விவகாரத்தை வெளியே கொண்டு வரும் நபர்கள் Whistle blowers.

பணத்திற்காக கம்பெனி ரகசியங்களை போட்டி கம்பெனியிடம் விற்பவர்கள் corporate traitors.

கார்ப்பரேட் வில்லன் கதைதான். ஆனால் திரைக்கதையை அணுகிய விதத்தில் வழக்கமான கார்ப்பரேட் வில்லன் படங்களிலிருந்து கலகத்தலைவன் சற்று மாறுபட்டு நிற்கிறது.

உதயநிதி, ஆரவ், கலையரசன் மற்றும் நிதி அகர்வால் ஸ்கோர் செய்கிறார்கள்.

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் நடக்கும் பென் ட்ரைவ் காட்சியும் கிளைமாக்ஸ் காட்சியும் படத்தின் ஹைலைட் காட்சிகள்.

பின்னணி இசை நன்று.

சண்டை காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளன.  

உதயநிதிக்கும் நிதி அகர்வாலுக்கும் இடையிலான காதல் காட்சிகள் little bit of diversion from main plot.

 அர்ஜுன் கதாபாத்திரம் சற்று cinematic & exaggerated ஆக இருந்தது... அது whistle blowers அல்லது corporate traitorsஆக இருக்கட்டும்... விவரத்தை கசித்த நபர்களை கண்டறிந்தால் வேலையிலிருந்து தூக்குவார்கள். கொலை செய்யும் அளவிற்கு செல்வது போன்று காண்பித்திருப்பது cinematic and exaggerated ஆக இருந்தது...ஒரு ex Indian army commando எப்படி இது போன்ற criminal activitiesல் ஈடுபடுகிறார் என்கிற கேள்வி எழாமல் இல்லை 

மொத்தத்தில், Whistle blowers குறித்து பதிவு செய்கிறது கலகத்தலைவன். நன்று.

Maximum Ratings: 3.25 * stars

Minimum Ratings: 3 * stars

Score card: 50 to 40/100

Value: Good to Watchable 

New Ratings of Cinemaprabhanjam 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre




 



Comments