Kantara box

Kantara


Review 

1847...ஏராளமான செல்வம் இருந்தாலும் நிம்மதியை தேடி அலைகிறார் ஓர் அரசர்...அவர் தேடும் நிம்மதி பஞ்சுருளி தெய்வ சிலையிடம் கிடைக்கிறது...தெய்வ சிலையை வீட்டிற்கு எடுத்து கொண்டு, தனக்கு சொந்தமான பல ஏக்கர் வன நிலத்தை ஊர் மக்களிடம் கொடுத்து விடுகிறார் அரசர்...அங்கிருக்கும் தெய்வா(அருள் வாக்கு சொல்பவர்) அரசர் கொடுத்த வாக்கை மீற கூடாது என கூற, அரசர் ஒப்பு கொள்ளுகிறார்...பஞ்சுருளி தெய்வ சிலையை தனது வீட்டிற்கு எடுத்து செல்கிறார்...அவர் தேடும் நிம்மதி கிடைக்கிறது....அவர் வீட்டில் மகிழ்ச்சி தங்குகிறது....

காலங்கள் செல்கின்றன...1970 களில் அரசர் வழியில் வரும் வாரிசு ஒருவர் கொடுத்த நிலத்தை திரும்ப கேட்கிறார்...பூத கோலா திருவிழாவில் நிலத்தை மீண்டும் கேட்கிறார்...நீதி மன்றத்தின் படிகளை அணுக போவதாக கூறுகிறார்...அருள் வாக்கு சொல்பவர், வாக்கை மீறினால் "நீ ரத்தம் கக்கி சாவாய்" என கூற, அதனை பொருட்படுத்தாமல் வாரிசு நீதி மன்றத்தின் படிக்கட்டுகளை நாட, மர்மமாக நீதி மன்ற வாசலில் ரத்தம் கக்கி சாகிறார் ...

காலங்கள் செல்கின்றன...1990களில் ஷிவா 
(Rishab Shetty)  காடுவெட்டு கிராமத்தின் ஹீரோ அல்லது தலைவர் போன்றவர்... கம்பாலா ஆட்டக்காரர்...ஊருக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற நோக்கம் கொண்டவர்....அவருக்கும் ஊருக்கும்  ஆதரவாக தேவேந்திரா (Achyuth Kumar)  இருக்கிறார்....தேவேந்திரா, அரசர் வழியில் வரும் வாரிசு.... ஊர் மக்கள் எல்லோரும் தேவேந்திராவை முதலாளி என்று அழைப்பார்கள்... 

வனத்துறை அதிகாரியாக வரும் முரளிதர் ( Kishore) வனப்பகுதியை கணக்கெடுப்பு எடுத்து, ஊரையும் காட்டையும் Reserved Forest Areaவாக மாற்ற நினைக்கிறார்... இதனால் முரளிதருக்கும் ஷிவாவிற்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது....ஊர் மக்கள் கண்களுக்கு தேவேந்திரா நல்லவராக தெரிகிறார்...ஆனால் உண்மையில் தேவேந்திரா நல்லவரா?

கிராம மக்கள் வசிக்கும் பகுதி Reserved Forest Areaவாக மாறினால் தேவேந்திராவால் நிலங்களை வாங்க முடியாது....நிலங்களை சொந்தம் கொண்டாட முடியாது.... அதற்காக தேவேந்திரா கிராம மக்களை ஏமாற்ற முற்படுகிறார்...அதாவது, தற்போது உள்ள நிலங்களை தன் பெயருக்கு மாற்றினால்  நான் நிலத்தின் உரிமையாளராக மாறிவிடுவேன்...ஏற்கனவே ஒருவருக்கு சொந்தமான நிலத்தினை அரசாங்கம் Reserved Forest Areaவாக அறிவிக்க முடியாது என கூறி நிலங்களை தன் வசம் பெற நினைக்கிறார் தேவேந்திரா...

அதோடு மட்டுமில்லாமல் குருவாவை (Swaraj shetty)  கொலை செய்கிறார் தேவேந்திரா...ஒரு பிரச்சனையில் சிறைக்கு செல்கிறார் ஷிவா....அப்போது குருவாவை சந்திக்கும் தேவேந்திரா, நீ அருள் வாக்கு கூறுபவன்...உன் பேச்சை ஊர் மக்கள் நம்புவார்கள்...அதனால் நிலங்களை என் பெயருக்கு மாற்றுமாறு ஒரு பொய்யான அருள் வாக்கு கூறு....அதற்கு கைமாறாக உனக்கு நான் சில நிலங்களை கொடுக்கிறேன் என கூற, அதற்கு குருவா சம்மதிக்காமல் போக, குருவாவை கத்தியால் கொலை செய்கிறார் தேவேந்திரா...

ஒரு பக்கம் முரளிதர் வனப்பகுதியை Reserved Forest Areaவாக மாற்ற நினைக்கிறார்...இன்னொரு பக்கம், நயவஞ்சமாக நடந்து கொள்கிறார் தேவேந்திரா.. வனப்பகுதி மக்களுக்கு சொந்தமான நிலம் எப்படி மீட்கப்பட்டது? கிராம மக்கள் தேவேந்திராவின் சுய ரூபத்தை அறிந்து கொண்டனரா? அதுவே காந்தாரா

குருவாவுக்கு பிறகு பூத கோலா ஆட்டத்தை ஷிவா ஆட சம்மதிக்கிறார்...தனது தந்தையை போலவே தெய்வீகமாக மறைந்து போகிறார்....

திரைக்கதையை தெய்வீக தன்மையோடு அமைத்திருப்பது படத்தின் சிறப்பம்சம்.

 Kantara depicts Kambala and Bhootha Kola/Deiva kola ritual dance of Karnataka through a village forest plot. 

Rishab Shetty, Kishore, Achyuth Kumar, Manasi Sudhir Sapthami Gowda and Swaraj shetty are key performers. 

அம்மா கதாபாத்திரத்தில் மானசி சுதீர் நன்றாக நடித்துள்ளார். 

ரிஷப் ஷெட்டி மற்றும் சப்தமி கௌடா விற்கு இடையிலான காதல் காட்சிகள் இயல்பாக இருந்தன.

Cinematography of Aravind S. Kashyap is Impressive. 

அஜனீஷ் லோகநாத்தின் பின்னணி இசை நன்று. 

கே எம் பிரகாஷ் மற்றும் ப்ரதீக் ஷெட்டியின் படத்தொகுப்பு நன்று.

ஒரு பக்கம் தெய்வீக தன்மையோடு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், அருள் வாக்கு குறித்த மூட நம்பிக்கைகளை காந்தாரா விதைக்கிறதோ  என்கிற கேள்வி படம் பார்க்கையிலே எழுகிறது...அருள் வாக்குகள் manipulate செய்யப்படலாம் என்பதை தேவேந்திராவும் குருவாவும் உரையாடும் காட்சியில் நாம் தெரிந்து கொள்கிறோம்....

Overall, A Well made movie on a moderate budget. 

Maximum Ratings: 3.5 * stars
Minimum Ratings: 3.25 * stars
Score card: 60 to 50/100

Value; Very Good to Good 

 Rating Structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre


Varaha Roopam



Divine. Beautiful.

Comments