Vaathi box

வாத்தி

Vaa Vaathi Reprise



Reprise version of Vaa Vaathi by Dhanush. Good. 


விமர்சனம்




தனுஷுக்காக பார்க்கலாம்...பரவால்ல...

தனியார் கல்லூரிகளை வைத்து நடத்தும் திருப்பதி (சமுத்திரக்கனி)  தனியார் கல்லூரி நிறுவனங்களின் தலைவர்... உள்நோக்கத்தோடு அரசு பள்ளிகள் சிலவற்றை தத்தெடுக்கிறார்...அரசு பள்ளிகளுக்கு 3rd grade ஆசிரியர்களை அனுப்புகிறார்...3rd grade ஆசிரியர்களை அனுப்பி வைத்தால் மாணவர்களுக்கு சரியான கல்வி கிடைக்காது...அப்படி கிடைக்காமல் போனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை தேர்வில் எடுக்க மாட்டார்கள்...அப்படி தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை எடுக்காமல் போனால் அரசு பள்ளிகள் என்றாலே சரியாக இருக்காது என்று கூறி, அரசு பள்ளிகளை தனியார் மையமாக்கலாம் என நினைக்கிறார் திருப்பதி...அவர் நினைப்பில் மண் தூவுகிறார் பால முருகன் தனுஷ்)...

ஆந்திரா-தமிழ்நாடு பார்டரில் இருக்கும் அரசு பள்ளிக்கு ஆசிரியராக செல்லும் பால முருகன், பள்ளிக்கே வர மறுக்கும் மாணவர்களை பள்ளிக்கு வர வைக்கிறார்... பசங்க எதுக்கு படிக்கணும்...தினசரி வேலைக்கு சென்றால் போதும் என்று பிற்போக்கு சிந்தனையில் இருக்கும் பெற்றோர்கள், பெண்கள் எதற்கு படிக்க வேண்டும்...அதான்  ஒரு நாளைக்கு திருமணமாகி போக போகிறார்களே என்று பிற்போக்கு சிந்தனையில் இருக்கும் பெற்றோர்கள்...மேல் ஜாதி கீழ் ஜாதி என்றிருக்கிற மனோபாவம்...இவற்றையெல்லாம் மாற்றி பள்ளிக்கு மாற்றத்தை கொண்டு வருகிறார்  பால முருகன்  ...மாணவர்களை மேம்படுத்துகிறார்....மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்...எங்கே தனது எண்ணம் நிறைவேறாமல்  போகுமோ என்று நினைக்கும் திருப்பதி, பாலமுருகனுக்கு பிரச்சனைகள் கொடுக்கிறார்... திருப்பதியின் சதியை பாலமுருகன் முறியடித்தாரா? எப்படி முறியடித்தார்? அதுதான் வாத்தி

ஏழை எளிய மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் மூலம்தான் கல்வி கிடைக்கிறது...குறைந்த கட்டணம்....
அரசு பள்ளிகள் தனியார்மையமானால் ஏழை மாணவர்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனி ஆகிவிடும்...அரசு பள்ளிகள் தனியார் மையமானால் அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் மற்றும் threats குறித்து வாத்தி பதிவு செய்கிறது...

  
தனுஷ் பாலமுருகன் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார்

தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா, சாய்குமார்  மற்றும் மாணவர்களாக நடித்திருப்பவர்கள் நன்றாக நடித்துள்ளார்கள்.

இன்றளவும் பிற்போக்கு அல்லது பின் தங்கிய சிந்தனையோடு மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... இன்றளவும்  கல்வியின் முக்கியத்துவத்தை அறியாத மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...அதனை வாத்தி பதிவு செய்கிறது...

ஜீ.வி. பிரகாஷின் பாடல்கள் நன்று. பின்னணி இசை நன்று. 

கொஞ்சம் மசாலா கலந்து திரைக்கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் வெங்கி அட்லூரி. ஆங்காங்கே தெலுகு படத்தை பார்ப்பதை போன்றோர் உணர்வு.

சில குறைகள் இருந்தாலும், வாத்தி நல்ல கருத்துக்களை எடுத்து வைக்கிறது....படத்தின் குறைகளை தனுஷ் தனது நடிப்பின் மூலம் ஈடுகட்டுகிறார்.

வாத்தி-> தனுஷுக்காக பார்க்கலாம்...பரவால்ல...

Maximum Ratings: 3 * stars
Minimum Ratings: 2.75 *stars
Score card: 40 to 30/100
Value: Watchable to Middling

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre



நாடோடி மன்னன் 


ஆண்டனி தாசன் குரலில் ஓர் அழகிய தெம்மாங்கு பாடல் 

 Vaa Vaathi




A Beautiful Melody from GV Prakash Kumar. Dhanush has penned the lyrics beautifully. Shweta Mohan has sung the song beautifully. 

Comments