Connect
Review
சூசனும் (Nayanthara) அவரது குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். சூசனின் மகள் ஆனாவுக்கு (Haniya Nafisa) லண்டனில் உள்ள ஓர் இசை பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் கிடைக்கிறது...லண்டன் போக விரும்புகிறாள் ஆனா....மூன்று ஆண்டு காலம் படிப்பை முடித்து விட்டு ஆனா போகட்டும் என சூசன் நினைக்கிறார்...லாஃடவுன் அறிவிக்கப்படுகிறது...சூசனின் கணவர் ஜோசப் (Vinay) ஓர் மருத்துவர்... நல்லவர்...தான் சிகிச்சை அளிக்கும் நோயாளிகளின் மீது அக்கறை கொண்டவர்... லாஃடவுன் என்றும் பாராமல் நோய் தொற்று பரவும் என்று தெரிந்தும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்... எதிர்பாரா விதமாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்...
தனது அப்பாவை இழந்த ஆனா, அவரது ஆவியோடு பேச நினைக்கிறார்...அதற்காக ஒரு மந்திரவாதியை வீடியோ காலில் அணுகுகிறார் ...அந்த வீடியோ காலுக்கு பிறகு வினோதமாக நடந்து கொள்கிறார் ஆனா... சாத்தான் அவளை ஆட்டுவிக்கிறது...ஆனாவை சூசன் லாஃடவுன் சமயத்தில் எப்படி மீட்டார்?அதுவே கனெக்ட்.
பலம்: 1. பேய் படத்துக்கு தேவைப்படும் திகில் காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவை கொடுத்துள்ளார் மணிகண்டன் க்ரிஷ்ணமாச்சாரி 2. நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கேர் மற்றும் ஹனியா நபீஸா நன்றாக நடித்துள்ளார்கள். குறிப்பாக பேய் பிடித்த ஆனா கதாபாத்திரத்தில் ஹனியா நபீஸா நன்றாக நடித்துள்ளார். 3. ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பு நன்று 4. ப்ரித்வி சந்திரசேகரின் பின்னணி இசை நன்று 5. படத்தின் running time 99 நிமிடங்கள் மட்டுமே...
பலவீனம்: 1. பழக்கப்பட்ட கதைக்களம்...ஹாலிவுட் பேய் படங்களை கனெக்ட் நினைவூட்டியது...குறிப்பாக,
2. Connect doesn't emotionally connect...
இயக்குனர் அஷ்வின் சரவணனின் சிறந்த படைப்பாக கனெக்ட் படத்தை கருத முடியாது...திகில் காட்சிகளுக்காக பார்க்கலாம். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பேய் படம். நல்ல முயற்சி.
Maximum Ratings: 3.25 * stars
Minimum Ratings: 3 * stars
Score card: 50 to 40/100
Value: Good to watchable
Value: watchable to Middling
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Teaser
Next Horror flick of Director Ashwin Saravanan after Maya and Game over.
Comments
Post a Comment