Driver Jamuna box

 ட்ரைவர் ஜமுனா


Digital platform: Aha




அரசியல் கொலைகள், குறிப்பாக கவுன்சிலர் கொலைகள் எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்பதை ட்ரைவர் ஜமுனா பதிவு செய்கிறது.

வக்கீல்களுக்கு கூலிப்படையோடு இருக்க கூடிய தொடர்பு குறித்து ட்ரைவர் ஜமுனா பதிவு செய்கிறது.
 கொலைகளை நிகழ்த்த code words பயன்படுத்தப்படுகின்றன என்பதை ட்ரைவர் ஜமுனா பதிவு செய்கிறது.
அரசியல் கொலைகளில் இருக்கக்கூடிய delegation process குறித்து ட்ரைவர் ஜமுனா பதிவு செய்கிறது.

உதாரணத்திற்கு, ஒரு தொகுதியில் ஒரு கவுன்சிலர் ஒன்று அல்லது இரண்டு முறை ஜெயித்துள்ளார் . தேர்தல் நெருங்குகிறது...புதிதாக ஒருவர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியாக அதே தொகுதியில் நிற்க முற்படுகிறார் என வைத்து கொள்வோம். முதலில் சமாதானமாக பேசி தனக்கு போட்டியாக நிற்கும் நபரை விலகி கொள்ளுமாறு கேட்கிறார் கவுன்சிலர். அதற்கு அந்த நபர் மறுப்பு தெரிவிக்கிறார். போட்டியாக நிற்கும் நபரை கொல்ல திட்டம் தீட்டுகிறார் கவுன்சிலர்.  கவுன்சிலரின் உதவியாளரோ (Personal assitant) அல்லது அவரது organogramல் இருக்கும் அடுத்த நபர் வக்கீலுக்கு போன் செய்து கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என கூறுவார். கல்யாணம் என்பது code word. கல்யாணம் என்றால் கொலை என்றர்த்தம். கல்யாணம் (கொலை) செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை வக்கீல் சொல்வார்.  அவர் கேட்கும் பணம் கொடுக்கப்படும். வக்கீல் கல்யாணத்துக்கு (கொலை) நாள் குறித்துக்கொண்டு கூலிப்படை நபர்களை தொடர்பு கொண்டு காரியத்தை முடிக்க சொல்வார். தேதி குறித்த நாளில் கூலிப்படை நபர்கள் காரியத்தை முடிப்பார்கள்.

கூலிப்படை கொலைகள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன என்பதை ட்ரைவர் ஜமுனா பதிவு செய்கிறது.

cab driverஆக வேலை பார்க்கிறார் ஜமுனா. ஒரு நாள் அவர் cabல் கூலிப்படை நபர்களும், ஒரு இசையமைப்பாளரும் பயணிக்கிறார்கள். அந்த கூலிப்படை நபர்களை காவல்துறை தேடுகிறார்கள். காரில் செல்லும் கூலிப்படை நபர்கள் எம்.எல்.ஏ. ஒருவரை கொல்ல பயணிக்கிறார்கள். கூலிப்படையிடம் மாட்டி கொள்கிறார் ஜமுனா. ஜமுனா அந்த கூலிப்படை நபர்களிடமிருந்து தப்பினரா? எம். எல். ஏவை காப்பாற்றினாரா? ஜமுனாவின் நோக்கம் என்ன?

கதைக்கேற்றவாறு சண்டை காட்சிகளை அமைத்துள்ளார் அனல் அரசு.
கோகுல் பினாயின் ஒளிப்பதிவு நன்று.
Ghibran பின்னணி இசை நன்று.
படத்தொகுப்பு நன்று.

ஐஸ்வர்யா ராஜேஷ், அபிஷேக் குமார்,  ஆடுகளம் நரேன், மணிகண்டன் ராஜேஷ், பின் சீட்டில் அமர்ந்த அந்த மூன்று கூலிப்படை நபர்கள்(நடிகர்கள்) நன்றாக நடித்துள்ளார்கள்.

நினைத்தது ஒன்று நடந்தது வேறு என்பது போல ட்ரைவர் ஜமுனாவின் கதை இருந்தது. cab ட்ரைவராக பணி புரியும் பெண் ஒருவர் தனது சவாரியில்  ரவுடிகளை எப்படி சமாளித்தார் என்பதுதான் கதையாக இருக்குமோ என நினைக்க, வழக்கமான பழி வாங்கும் கதையாக அமைந்தது படத்தின் பலவீனம்.

கதாபாத்திரங்களுக்கு இடையிலான emotional bonding இன்னும் மேம்பட்டு இருந்திருக்கலாம். குறிப்பாக, ஜமுனாவுக்கும் அவர் அப்பாவுக்கும் இடையிலான bonding  மற்றும் அவர் குடும்பத்தாரோடு இருக்க கூடிய bonding  இன்னும் மேம்பட்டு இருந்திருக்கலாம். ஜமுனா குடும்பத்தாரின் நிலைமை புரிகிறது. ஆனால் அதனை கொஞ்சம் emotionsஓடு கொடுத்திருந்தால் ட்ரைவர் ஜமுனா  இன்னும் மேம்பட்டு வந்திருக்கும். 

போரடிக்காமல் திரைக்கதை நகர்ந்தது. திரைக்கதையை ஆழமாக அமைத்திருந்தால் ட்ரைவர் ஜமுனா இன்னும் மேம்பட்டு வந்திருக்கும். 
Driver Jamuna is Good. Could have been better.

Maximum Ratings: 3.25 * stars
Minimum Ratings: 3 * stars
Score card: 50 to 40/100
Value: Good to Watchable 

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre



Trailer



Looks like a Road genre

Comments