Raangi
Review
க்ரைம் ரிப்போர்ட்டராக வேலை செய்கிறார் தையல்நாயகி(Trisha). அவரது அண்ணன் மகள் சுஷ்மிதாவுக்கு (Anaswara Rajan) ஓர் பிரச்சனை வருகிறது. சுஷ்மிதாவின் ஆபாச காணொளிகளை அவரது தந்தைக்கு ஒருவர் அனுப்பி மிரட்ட, பிரச்சனையை விசாரிக்கிறார் தையல்நாயகி . சுஷ்மிதா பேரில் யாரோ போலியான Facebook அக்கவுண்ட் உருவாக்கியுள்ளதை கண்டுபிடிக்கிறார். தாழ்வு மனப்பான்மை காரணமாக சுஷ்மிதாவின் classmate, சுஷ்மிதா பேரில் போலியான Facebook அக்கவுண்ட் உருவாக்கியுள்ளதை கண்டறிகிறார். Teeth malocclusion காரணமாக தான் அழகாக இல்லையென்றும், அதனால் மற்றவர்கள் தன்னோடு பழகுவதில்லை என்று நினைக்கும் classmate, அழகாக இருக்கும் சுஷ்மிதாவின் போட்டோவையும் பெயரையும் பயன்படுத்தி போலியான அக்கவுண்ட் ஒன்று உருவாக்கி பல நபர்களுடன் சாட் செய்கிறார்.
. சுஷ்மிதா பேரில் அந்த பெண் 19 நபர்களிடம் சாட் செய்வதை கண்டறிகிறார் தையல்நாயகி. அதில் 18 நபர்கள் ஆபாசமாக சாட் செய்கிறார்கள். அந்த 18 நபர்களை கூப்பிட்டு warning கொடுக்கிறார் தையல்நாயகி. 19 ஆவது நபரின் சாட் decentஆக இருக்கிறது. அவரோடு சாட்டில் உரையாட ஆரம்பிக்கிறார் தையல்நாயகி.
அவர் பெயர் ஆலிம். டுனீசியா நாட்டை சேர்ந்த ஆயுதம் ஏந்திய ஓர் போராளி என்பது தெரிய வருகிறது.
ஆயுதமேந்திய போராளியாக இருந்தாலும் சுஷ்மிதாவை உளமார காதலிக்கிறார் ஆலிம். ஆயுதம் ஏந்திய போராளியாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இறப்பு நேரலாம். அதனால் தான் திறப்பதற்குள் ஒரு முறையாவது சுஷ்மிதாவை நேரில் காண வேண்டுமென நினைக்கிறார் ஆலிம்.
இதனை கண்டறியும் உளவுத்துறை சுஷ்மிதாவையும் தையல்நாயகியையும் கைது செய்கிறது. ஆலிமை பிடிக்க சுஷ்மிதாவையும் தையல்நாயகியையும் பயன்படுத்துகிறது உளவுத்துறை. ஒரு குழுவோடு தையல் நாயகியும் சுஷ்மிதாவும் டுனீசியா வருகின்றனர்... சுஷ்மிதாவிற்கு இது எதுவுமே தெரியாது... டுனீசியாவில் சுஷ்மிதாவை தையல்நாயகி எப்படி மீட்டார்? சுஷ்மிதாவை உளமார காதலிக்கும் ஆலிமின் காதல் என்னவானது? அதுதான் ராங்கி.
எண்ணெய் வள அரசியலையும், போலி facebook அக்கவுண்ட் குறித்தும் ராங்கி பதிவு செய்கிறது.
த்ரிஷா, பெக்சோட் அப்துமாலிக்ஒவ் மற்றும் அனஸ்வரா ராஜன் நன்றாக நடித்துள்ளனர்.
சி. சத்யாவின் இசையில் பனித்துளி பாடல் அருமை. பின்னணி இசை நன்று.
படம் பார்க்கும் போது நிறைய லாஜிக்கல் கேள்விகள் எழுந்தன....
சில காட்சிகள் அபத்தமாக இருந்தன... சுஷ்மிதாவின் ஆடைகளை களைய சொல்லி தையல் நாயகி சுஷ்மிதாவை பரிசோதிக்கும் காட்சி ஓர் உதாரணம்....
ஏ. ஆர். முருகதாஸின் கதை நன்றாக உள்ளது. அதனை இயக்குனர் சரவணன் இயக்கிய விதம் இன்னும் மேம்பட்டு இருந்திருக்கலாம்.
ராங்கி-> த்ரிஷாவுக்காக பார்க்கலாம்.
Maximum Ratings: 3 * stars
Minimum Ratings: 2.75 * stars
Score card: 40 to 30/100
Value: Watchable to Middling
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Trailer
Trisha in a new dimension.
Trisha in Raangi. Directed by M Saravanan.
Comments
Post a Comment