Gatta Kusthi box

 கட்டா குஸ்தி

விமர்சனம் 

Digital Platform: Netflix



A Family entertainer!!!


Highlight of the movie: Comedy

நகைச்சுவையோடு நல்ல கருத்தினை பதிவு செய்கிறது கட்டா குஸ்தி

பாலக்காட்டில் வசிக்கும் கீர்த்தி (ஐஸ்வர்யா லக்ஷ்மி)  குஸ்தி சண்டை வீராங்கனை. தனது தங்கைக்கு eve teasing பிரச்சனை ஒன்று வர, teasing செய்தவர்களோடு சண்டை செய்கிறார் கீர்த்தி. Teasing செய்தவர்களை வெளுத்து வாங்குகிறார். அது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது. இதனால் கீர்த்திக்கு உள்ளூரில் வரன் வராமல் போகிறது.

ஆண் ஆதிக்க மனப்பான்மையோடு வளர்கிறார் வீரா. அதற்கு காரணம் அவரது தாய் மாமன். எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கும் வீரா (விஷ்ணு விஷால்) தனக்கு வரப்போகும் மனைவி தன்னை விட குறைந்த படிப்பு படித்திருக்க வேண்டுமென்றும், பெண்ணின் கூந்தல் நீளமாக இருக்க வேண்டும் என இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறார். குறைந்த படிப்பு படித்திருந்தால் பெண் தனக்கு கட்டுப்பட்டு நடப்பார் என்றும், ஆதிக்கம் செய்ய மாட்டாரென்றும் வீரா நினைக்கிறார். இதனால் வீராவுக்கு உள்ளூரில் வரன் வராமல் போகிறது.

கீர்த்தியின் மாமா கணேசன் (முனீஷ்காந்த்)  எதர்ச்சையாக ஒரு நாள் தனது பால்ய நண்பன் ரத்தினத்தை  (கருணாஸ்) சந்திக்கிறார். ரத்தினம் வீராவுக்கு பெண் பார்க்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் கணேசன், கீர்த்தியை வீராவுக்கு மணம் முடிக்கலாம் என நினைக்கிறார். வீராவின் நிபந்தனையை அறிந்து கொள்ளும் கணேசன், கீர்த்தி குத்து சண்டை வீராங்கனை என்பதை மறைக்கிறார். கீர்த்தி குறைவாக படித்திருக்கிறார் என்றும், கீர்த்திக்கு கூந்தல் நீளமாக இருக்கும் என்று பொய் கூறுகிறார்.

கீர்த்திக்கும் வீராவுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

தாஸ் (அஜய்) நடத்தும் தொழிற்சாலைக்கு எதிராக நிற்கிறார் வீரா. வீராவை போட்டு தள்ள ஆட்களை அனுப்புகிறார் தாஸ். அப்போது கீர்த்தி, தாஸின் ஆட்களை அடித்து துவம்சம் செய்கிறார். அந்த சண்டையில் கீர்த்தியின் கூந்தல் சிறிதென்பதும், கீர்த்தி குஸ்தி சண்டை வீராங்கனை என்பதும், கீர்த்தி தன்னை விட அதிகம் படித்திருக்கிறார் என்பதும் வீராவுக்கு தெரிய வருகிறது. ஒரு பெண் தன்னை காப்பாற்றிவிட்டார் என்கிற ஈகோவின் காரணமாக, நடந்த சம்பவத்தை அவமானாக நினைக்கிறார் வீரா.அதன் பிறகு என்ன நடந்தது? அதுவே கட்டா குஸ்தி 

தொழில்முறை வாழ்க்கையில் (Professional life) சாதிக்கலாம் என நினைக்கும் பெண்களுக்கு ஆண் முட்டுக்கட்டையாக இருந்து விட கூடாது என்பதையும், பெண்ணை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும், ஊக்குவிக்காமல் போனாலும் பரவாயில்லை...Discourage செய்யாமல் இருந்தால் போதும் என்கிற கருத்தினை கட்டா குஸ்தி பதிவு செய்கிறது. 

ஆணாதிக்க மனப்பான்மையின் போக்கு எப்படி இருக்கிறதென்பதை கட்டா குஸ்தி பதிவு செய்கிறது.  

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ், முனிஷ்காந்த், காளிவெங்கட், ரெடின் கிங்ஸ்லி, ஹரீஷ் பேரடி மற்றும் கஜராஜ் போன்றோர் நன்றாக நடித்துள்ளனர்.

பாடல்கள் சுமார். பின்னணி இசை ஓகே.

விஷ்ணு விஷாலின் கதாபாத்திரம், கேப்டன் விஜயகாந்த் நடித்த "நானே ராஜா நானே மந்திரி" திரைப்படத்தை  நினைவுப்படுத்தியது.

Overall, a Good Entertainer from Chella Ayyavu!!!

Maximum Ratings: 3.25 * stars
Minimum Ratings: 3 * stars
Score card: 50 to 40/100
Value: Good to Watchable  

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre




Comments