அரசாங்கத்துக்கும் (காவல் துறை) கிளர்ச்சி படைக்கும் நடக்கும் போரில் பொது மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விடுதலை பதிவு செய்கிறது.
காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விடுதலை பதிவு செய்கிறது.
காவல்துறையின் தவறான அணுகுமுறைகள் மற்றும் யுக்திகள் குறித்து விடுதலை பதிவு செய்கிறது.
கதை 1987ல் நடக்கிறது. அரசாங்கத்தை எதிர்த்து "மக்கள் படை" என்னும் கிளர்ச்சி படை உருவாகிறது.. அருமபுரி என்னும் மாவட்டத்தில் சுரங்கம் அமைக்க திட்டமிடுகிறது ஓர் தனியார் கம்பெனி..சுரங்கம் தோண்டினால் கனிம வளங்கள் சுரண்டப்படும் என்று அந்த திட்டத்தை எதிர்க்கிறது மக்கள் படை. மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி). அருமபுரி அருகே ஒரு ரயில் விபத்தொன்று நடக்கிறது. விபத்துக்கு எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், அரசாங்கம் இந்த ரயில் விபத்தை மக்கள் படைதான் செய்தது என்று சொல்லி மக்கள் படை அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கிறது. மக்கள் படை தலைவர்களை உயிரோடவோ அல்லது பிணமாகவோ பிடிக்க உத்தரவு பிறப்பிக்கிறது. அதனை Operation Ghost Huntஆக அறிவிக்கிறது.
Chief secretary (ராஜிவ் மேனன்) Operation Ghost Huntஐ அறிவிக்கும் போதே பல கேள்விகள் மனதில் எழுகின்றன.
ரயில்வே குண்டு வெடிப்பு மற்றும் விபத்துக்கு எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை... எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில் எப்படி மக்கள் படைதான் இதற்கு காரணம் என்று அரசாங்கமோ அல்லது காவல்துறையோ முடிவுக்கு வருகிறது என்கிற கேள்வி எழுகிறது... மக்கள் படைதான் குண்டு வெடிப்பு மற்றும் விபத்துக்கு காரணம் என்பதற்கான தகுந்த ஆதாரம் அரசாங்கமிடமோ அல்லது காவல்துறையிடமோ இல்லாத போது மக்கள் படைதான் காரணம் என்று எவ்வாறு முடிவுக்கு வரப்படுகிறது என்கிற கேள்வி எழுகிறது.
மக்கள் படை தலைவர்களை பிடிக்க கம்பெனி சுரங்கம் அமைக்க திட்டமிட்டிருக்கும் ஊரில் கேம்ப் ஒன்று அமைக்கிறது காவல் துறை. அந்த கேம்பில் டிரைவராக வந்து சேர்கிறார் குமரேசன்(சூரி). குமரேசன் நல்லவர். மனித நேயத்துடன் நடந்து கொள்ள விரும்புகிறவர். குமரேசன் மூலமே கதை பயணிக்கிறது. குமரேசன் கேம்பில் மேற்கொள்ளும் அனுபவங்களே விடுதலை பாகம் 1. குமரேசன் தனது அம்மாவுக்கு எழுதும் கடிதங்களே விடுதலை பாகம் 1.
ஆயுதம் ஏந்திய அமைப்பாக இருக்கிறது மக்கள் படை. சில கேள்விகள் எழுகின்றன. மக்கள் படை அரசாங்கத்தையும் அந்த கம்பெனியையும் எதிர்ப்பது நியாயமாக இருந்தால் ஏன் மக்கள் படை நீதி மன்றத்தை நாடவில்லை என்கிற கேள்வி எழுகின்றது. ஒரு சாமானியன் நீதி மன்றத்தை நாடி பொது நல வழக்கு போட முடியுமே. ஒரு அமைப்பாக இருக்கிற மக்கள் படை ஏன் நீதி மன்றத்தை நாடவில்லை? துப்பாக்கி வாங்கவும் குண்டு வாங்கவும் காசு இருக்கிற மக்கள் படைக்கு நீதி மன்றத்தில் வழக்கு போட காசு இல்லையா என்கிற கேள்வி எழுகிறது.... மக்கள் படை கம்பெனியின் திட்டத்தை எதிர்ப்பதற்கான valid scientific arguments என்ன என்கிற கேள்வி எழுகிறது.
கேம்பில் வேலை செய்யும் அதிகாரிகள் அனைவரும் ordersஐ பின்பற்றுகிறார்கள். ஒரு நாள் குமரேசன் தனது ஜீப்பில் சென்று கொண்டிருக்கையில் உடம்பு முடியாமல் செல்லும் ஓர் மூதாட்டியை கவனிக்கிறார். அந்த நேரத்தில் OCயின் உத்தரவை மீறி அந்த மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்து உதவி செய்கிறார். மனித நேயத்துடன் தான் நடந்து கொண்டதற்காக OC தன்னை பாராட்டுவார் என குமரேசன் நினைக்க, OC (சேத்தன்) குமரேசனின் கன்னத்தில் அறைகிறார். அதோடு மட்டுமின்றி குமரேசனுக்கு physical punishmentம் கொடுக்கிறார். குமரேசன் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என OC நினைக்கிறார். ஆனால் குமரேசனோ தான் தவறே செய்யாத போது எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென நினைக்கிறார்.
குமரேசனின் சுயமரியாதையையும் OC யின் அதிகார திமிரையும் அந்த காட்சிகளில் நாம் அறிகிறோம். அதே நேரத்தில் OC எதிர்பார்ப்பது ஒரே ஒரு sorry...அதனை சொல்லிவிட்டு குமரேசன் செல்லலாமே. ஏன் வீம்பு பிடிக்கிறார் என்கிற கேள்வியும் எழுகிறது.
மூதாட்டியின் பேத்தியான தமிழரசியோடு அறிமுகமாகிறார் குமரேசன். அவரோடு பழகுகிறார். அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். ஒரு காட்சியில் "போலீஸ் கூட பழகுறோம்னு தெரிஞ்சாலே எங்கள அசிங்கமா பார்ப்பாங்க" என்று தமிழரசி சொல்லும்போது இவர் ஏன் இப்படி பேசுகிறார் என தோன்றும். ஆனால் அதற்கான காரணம் இரண்டாம் பாதியில் தெரிய வரும்போதுதான் தமிழரசி ஏன் அப்படி சொன்னார் என்பது புரியும்.
கேம்ப் அமைத்தும் சரியான பலன் கிடைக்காததால், கேம்பிற்கு புதிதாக ஒரு அதிகாரியை (கவுதம் மேனன்) நியமிக்கிறது அரசாங்கம். மக்கள் படை தலைவர்களை பிடிக்க வேண்டுமானால் பொது மக்களோடு நட்புடன் இருக்க வேண்டும் என நினைக்கும் சுனில் மேனன் (கவுதம் மேனன்) ஒரு திருவிழா ஏற்பாடு செய்து அதில் ஊருக்கு நல்லது நடக்காமல் போவதற்கு காரணம் மக்கள் படைதான். மக்கள் படையை பிடித்து கொடுக்க உதவுங்கள் என சொல்கிறார்.
ஒரு நாள் ஜீப்பில் சென்று கொண்டிருக்கும் போது சில கிராம மக்களை போகும் வழியில் விட்டு செல்கிறார் குமரேசன். அதில் பெருமாளும் இருக்கிறார்...ஜீப்பில் வந்தது பெருமாள்தான் என்பது குமரேசனுக்கு தெரியாது. ஆனால் அவரது முகத்தை பார்த்து விடுகிறார். சில தினங்களுக்கு பிறகு ஏற்கனவே குமரேசனை பார்த்தவர்கள் கூறிய அங்க அடையாளங்களை வைத்து Face portrait வரையப்படுகிறது. அதனை பார்க்கும் குமரேசன் தான் பார்த்தது பெருமாள் என்பதை புரிந்து கொள்கிறார். விஷயத்தை OCயிடம் தெரிவிக்கலாம் என ஏட்டய்யாவிடம் விஷயத்தை தெரிவிக்கிறார். ஆனால் அந்த ஏட்டையாவோ மக்கள் படைக்கு ஆதரவாக ரகசியமாக செயல்படுபவர். குமரேசன் OCயிடம் சென்று விஷயத்தை தெரிவிக்கா வண்ணம் பார்த்து கொள்கிறார். குமரேசன் குறித்து மக்கள் படையில் இருக்கும் சில நபர்களிடம் போட்டு கொடுக்கிறார். குமரேசனை கொல்ல மக்கள் படையை சேர்ந்த சிலர் திட்டமிடுகின்றனர். ஆனால் அவர்கள் திட்டமிட்டு செயல்படும் நேரத்தில் அங்கே DGPயின் வண்டி வருகிறது. DGPயை கொல்லத்தான் மக்கள் படை திட்டமிட்டதாக காவல்துறை நினைக்கிறது.
அதனை தொடர்ந்து மேலும் சில தாக்குதல்கள் நடக்கின்றன. ஒரு காவல் துறை அதிகாரி கொல்லப்படுகிறார். இதனால் ஆத்திரம் அடையும் சுனில் மேனன் பொது மக்களை விசாரணை என்கிற பேரில் அழைத்து கொடுமைப்படுத்துகிறார். Things are taken for granted by the Department. இந்த இடத்தில் காவல்துறையின் தவறான அணுகுமுறைகளையும் தவறான யுக்திகளையும் காண்கிறோம். மனித உரிமை மீறல்களையும் காண்கிறோம்.முதலில் நட்பு கரம் நீட்டும் காவல்துறை இன்னும் பொறுமையோடு இருந்திருந்தால் அவர்கள் எதிர்பார்க்கும் Intel கிடைத்திருக்கும். சரியான intelligence இல்லாமல் பொது மக்களை randomஆக pick செய்து கொடுமைக்குள்ளாக்குவது எவ்வாறு சரி என்கிற கேள்வி எழுகிறது. மக்கள் படையை சேர்ந்தவர்களை பிடிக்கவேண்டும் என்பதற்காக மலைவாழ் மக்களை கொடுமைப்படுத்துவது எவ்வாறு சரி என்கிற கேள்வி எழுகிறது. எப்போதெல்லாம் OCயை சந்தித்து பெருமாள் இருக்கும் இடம் குறித்து குமரேசன் கூறலாம் என நினைக்கிறாரோ அப்போதெல்லாம் அதனை ஏட்டய்யா தடுக்கிறார்.
ஒரு கட்டத்தில் தான் விரும்பும் தமிழரசியை ஊர் பெண்களோடு விசாரணைக்கு அழைக்கிறது காவல் துறை.
தமிழரசியை காப்பாற்ற போராடுகிறார் குமரேசன். OC யிடம் பெருமாள் இருக்கும் இடம் எனக்கு தெரியும் என்று கூற முற்படுகிறார் குமரேசன். ஆனால் OC அதனை காது கொடுத்து கேட்காமல் போகிறார். அதனால் DGPஐ சென்று சந்தித்து விவரத்தை கூறுகிறார். DGP காவல் படையை அனுப்பி பெருமாளை பிடிக்க முற்படுகின்றனர். முடிவில் பெருமாளை பிடித்து விடுகிறார் குமரேசன்.
சுனில் மேனனை விட OC ராகவேந்தர் இன்னும் மோசமானவராக இருக்கிறார். சட்டத்தில் இருக்கும் என்கவுன்டரை அதிகார துஷ்ப்ரயோகம் செய்வது,பெண்களை நிர்வாணமாக்கி பார்ப்பது என வக்கிர புத்தி நிறைந்தவராக இருக்கிறார். கணக்கு காட்டப்படாத என்கவுண்டர் குறித்தும், விசாரணை என்கிற பேரில் நடக்கும் 3rd degree treatment குறித்தும் விடுதலை பாகம் 1 பதிவு செய்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மக்கள் படையோடு துளியும் தொடர்பில்லாதவர்கள் கூட காவல்துறையின் விசாரணையில் பாதிக்கப்படுவதுதான் வேதனை. அது சுனில் மேனனோ அல்லது OC ராகவேந்தரோ... இது போன்ற மனித உரிமை மீறல்கள் தவறில்லை என்று அவர்கள் நினைக்கும் நினைப்புதான் தவறு என்பதை வெற்றிமாறனின் திரைக்கதை நமக்கு உணர்த்துகிறது. ஏழை எளிய மக்களை விசாரணை என்கிற பெயரில் கொடுமைப்படுத்துவது எவ்வாறு சரி...How can things be taken for granted? என்கிற கேள்வி எழுகிறது. இந்த படத்தை ஜாதிய ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ வெற்றி மாறன் அணுகவில்லை.... ஏழை எளியவர் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இவ்வாறு பொது மக்களை துன்புறுத்தும் தைரியத்தை யார் காவல்துறைக்கு கொடுத்தது என்கிற கேள்வி படம் பார்க்கையிலே எழுகிறது.
காவல்துறையின் கருப்பு பக்கங்களை பதிவு செய்திருந்தாலும், இன்னொரு புறம் காவல்துறை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அசட்டு தைரியத்தை கொடுக்கும் படைப்பாக விடுதலை பாகம் 1 இருப்பது சற்றே நெருடல். உதாரணத்திற்கு, இந்த படத்தை ஒரு காவல் துறை அதிகாரியோ அல்லது கான்ஸ்டபிலோ பார்த்தால் நாம என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அசட்டு தைரியம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
மனசாட்சியை உலுக்கும் படைப்பாக விடுதலை பாகம் 1 இருக்கிறது.
இயல்பான வெள்ளந்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சூரி. Excellent debut as a Lead Actor.
சில காட்சிகளே வந்தாலும் பெருமாள் வாத்தியாராக மனதில் பதிகிறார் விஜய் சேதுபதி.
தமிழரசியாக பவானி ஸ்ரீக்கு நல்ல அறிமுகம்.
சுனில் மேனன் கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நன்றாக நடித்துள்ளார்.
வெறுக்கத்தக்க கதாபாத்திரம். OC ராகவேந்திரரராக சேட்டன் நன்றாக நடித்துள்ளார்.
சில காட்சிகளே வந்தாலும் Chief secretrary கதாபாத்திரத்தில் ராஜிவ் மேனன் நன்றாக நடித்துள்ளார்.
இளையராஜாவின் பின்னணி இசை பலம். இருளில் ஒளி போன்று காட்டு மல்லி மற்றும் உன்னோட நடந்தா பாடல்கள் இருக்கின்றன.
வேல்ராஜின் ஒளிப்பதிவு பலம்.
ராமரின் படத்தொகுப்பு பலம்.
கதையோடு ஒன்றி வரும் சண்டை காட்சிகளை இயல்பாக அமைத்துள்ளார் ஸ்டன் சிவா.
பலவீனம்: ரயில்வே விபத்து காட்சி நம்பும்படியில்லை. சினிமா செட் என்பது கண்கூடாகவே தெரிந்தது. 80களில் ஓடும் ரயில்களில் நிறைய coaches இருக்கும். ஏதோ நான்கு ஐந்து coaches வைத்து விபத்து போன்று காட்சிப்படுத்தியிருக்கிறார் வெற்றி மாறன். It wasn't real... Could have been better...
மொத்தத்தில், சர்வதேச தரத்தில் தரமான படத்தை கொடுத்துள்ளார் வெற்றிமாறன்
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Kaatu Malli
Simple & Beautiful song from Maestro Ilayaraja.
Trailer
Viduthalai is Debut movie for Soori as a Lead Actor. Looks like Vijay Sethupathi is an Insurgent in Viduthalai. Viduthalai could be about how a low rank officer is treated by his superiors and his role in capturing an insurgent.
உன்னோட நடந்தா
காட்டு பாதையில் ஒரு விதமான அமைதி நிலவும்.அதனை பிரதிபலிக்கும் விதமாகவும், அந்த அமைதியில் ஒலிக்கும் இசை போல் உள்ளது உன்னோட நடந்தா. சுகா வரிகளை நன்றாக அமைத்துள்ளார். தனுஷ் மற்றும் அனன்யா பட் நன்றாக பாடியுள்ளனர். Beautifully composed by இசைஞானி இளையராஜா

Comments
Post a Comment