கண்ணை நம்பாதே
அருண் (உதயநிதி) திவ்யாவை (ஆத்மிகா) காதலிக்கிறார்... திவ்யா வீட்டில் Ground floorல் வாடகைக்கு இருக்கிறார்....வாடைகைக்கு இருந்து கொண்டு திவ்யாவை காதலிப்பதால், அவருடைய தந்தை (ஞானசம்பந்தம்) அருணை வீட்டை விட்டு காலி செய்ய சொல்கிறார்...வீடு தேடி அலையும் அருணுக்கு ஒரு வீடு கிடைக்கிறது...ஆனால் அந்த வீட்டில் ஏற்கனவே சோமு (பிரசன்னா) தங்கியிருக்கிறார்... சோமுவோடு வீட்டை பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல்....வேறு வழியின்றி ஒப்பு கொள்கிறார் அருண்...அன்று மாலை சோமு அருணை டாஸ்மாக்கிற்கு அழைக்கிறார்...மது பழக்கம் இல்லாத அருண், ஜெகன்(சதீஷ்) மற்றும் சோமுவோடு டாஸ்மாக் செல்கிறார்...சிறிது நேரம் கழித்து அங்கே ஓர் கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதுகிறது ... உள்ளே ஓர் பெண் (பூமிகா)... அந்த பெண்ணோடு உரையாடுகிறார் அருண்...அந்த பெண் மயக்க நிலையில் (drowzy) இருக்கிறார்...தான் கார் ஓட்டும் நிலையில் இல்லையென்றும், தன்னை வீட்டில் விடுமாறும் அந்த பெண் உதவி கேட்க, உதவ முன் வருகிறார் அருண். அவர் காரிலேயே வீட்டிற்கு சென்று, அந்த பெண்ணை இறக்கி விடுகிறார்...அப்போது மழை கனமாக பெய்கிறது...அருணுக்கு நன்றி கூறும் அந்த பெண், மழை கனமாக பெய்வதால் காரை எடுத்து சென்று நாளை விடுமாறு கூறுகிறார்...அருண் அந்த காரை எடுத்து சென்று ரூமுக்கு வந்து விடுகிறார்...
நள்ளிரவில் அருண் தூங்கிய பிறகு அந்த காரை எடுத்து கொண்டு அந்த பெண் வீட்டிற்கு செல்கிறார் சோமு...அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை கொன்று விடுகிறார்... அந்த பெண்ணின் சடலத்தை கார் டிக்கியில் போட்டுவிட்டு காரை ஒட்டிக்கொண்டு ரூமிற்கு வந்து விடுகிறார்....அடுத்த நாள் காரை எடுக்கும் அருண் அதிர்ந்து போகிறார்....தான் செய்யாத கொலைக்கு தன் மீது கொலை பழி வந்து விடுமோ என ஐயப்படுகிறார் அருண்....குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல, கொலையை செய்து விட்டு அருணுக்கு உதவுவது போல் நடிக்கிறார் சோமு...எதிர்பாரா விதமாக சோமு சாலையில் ஒரு விபத்தை செய்து ஒருவரை கொன்று விடுகிறார் ... ஒரு கொலைக்கு மேல் இரு கொலையாகிறது...இரு கொலைகள்...இரு பிணங்கள்....இரண்டு பிணங்களையும் பாலத்திலிருந்து தூக்கி போடுகிறார்கள் அருணும் சோமுவும்....இரண்டாவதாக இறந்தவர் இன்ஸ்பெக்டர் மகன்.... பாலத்திலிருந்து பிணத்தை தூக்கி போடும் போது அதனை யாரோ புகைப்படம் எடுக்கிறார்கள்...எடுத்து அருணையும் சோமுவையும் மிரட்டுகிறார்கள்.... ஒரு கட்டத்தில் இறந்த பெண் உயிரோடு திரும்ப வருகிறார்....இறந்த பெண் எவ்வாறு உயிரோடு வருகிறார்? அன்றிரவு உண்மையில் என்ன நடந்தது? நண்பனை போல் நடிக்கும் சோமுவின் துரோகத்தை அருண் புரிந்து கொண்டாரா? அதுவே கண்ணை நம்பாதே.
NGO'sன் மறுபக்கத்தை காட்டுகிறது கண்ணை நம்பாதே. ஆதரவற்றோரை CPH4 மருந்தின் வியாபார நோக்கத்திற்காக ரகசியமாக பயன்படுத்துவது குறித்து கண்ணை நம்பாதே பதிவு செய்கிறது. CPH4 drugஐ extract செய்யும் அளவிற்கு நாம் விஞ்ஞானத்தில் வளரவில்லை.... உண்மையில், CPH4 extractionக்காக ஆதரவற்றோர் பயன்படுத்தப்படுகிறார்களா என்கிற கேள்வி எழுந்தாலும், படத்தை பார்க்கும் போது Organ tradeக்காக ஆதரவற்றோர் பயன்படுத்தக்கூடும் அல்லது அதற்கான வாய்ப்பிருக்கிறது என்கிற சிந்தனை படம் பார்க்கும் போது எழுகிறது.
A crime thriller with Twists and Turns
Udhayanidhi, Prasanna, Bhoomika, Srikanth and Vasundra Kashyap are key characters.
Marimuthu, Pazha Karupaiah, Gnanasambandham, Aathmika, Subhiksha, Sendrayan and Sathish have done their part well. Sathish comes and disappears. Not much of scope for Aathmika.
Director tries to convey too many things in the screenplay which is a minus....
Most of the scenes take place at night...Cinematography was good...
Overall, an engaging crime thriller.
Maximum Ratings: 3 * stars
Minimum Ratings: 2.75 * stars
Score card: 40 to 30/100
Value: Watchable to Middling
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Trailer
Looks like a murder mystery.
Comments
Post a Comment