August 16 1947
விமர்சனம்
கதை இந்தியா சுதந்திரம் பெற போகும் சில நாட்களுக்கு முன் தொடங்குகிறது...உலகிலேயே மிகவும் உயர் ரக பருத்தியான பட்டீசா பருத்தியை செங்காடு என்னும் கிராமம் விளைவிக்கிறது...வெளி உலக தொடர்பில்லாத கிராமமாக இருக்கிறது செங்காடு...மிகவும் தரமான அரிய வகை பருத்தி செங்காடு கிராமத்தில் விளைவதால் அந்த கிராமத்தின் விளைச்சலை இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் முப்பது ஆண்டுகளுக்கு பெற நினைக்கிறது ஆங்கிலேய அரசாங்கம்... இது தொடர்பாக ஒரு meetingஐ ஏற்பாடு செய்து அதற்கான கடிதத்தை செங்காடு கிராமத்து அதிகாரி Mr. Robert Cliveக்கு அதிகாரிகள் மூலம் அனுப்பி வைக்கிறது ஆங்கிலேய அரசாங்கம்..போகும் வழியில் புலி தாக்கி அதிகாரிகள் இறந்து விடவே அந்த கடிதம் ராபர்டுக்கு செல்லாமல் போகிறது...
ராபர்ட் தயவற்ற கொடூரமான ஓர் அதிகாரி... செங்காடு கிராம மக்களை சித்ரவதை செய்து வேலை வாங்குகிறார்... தண்ணீர் குடிக்கவோ அல்லது சிறுநீர் கழிக்கவோ அல்லது வேலை நேரத்தில் பேசினாலோ அல்லது சிறிது நேரம் யாரேனும் அசைந்தால் கூட அவர்களுக்கு சவுக்கடி... ராபர்டுக்கு எதிராக யாரேனும் கிளர்ச்சி செய்ய முற்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை...கழு மரத்தில் ஏற்றி கொடூரமாக கொலை செய்பவர்... ராபர்ட்டின் தலைமைத்துவ பாணி எவ்வாறென்றால் பயமுறுத்தி அடிமைப்படுத்தி வேலை வாங்குபவர்...ஜாலியன் வாலா பாக் சம்பவம் நிகழ்வதற்கு காரணமாக இருந்தவர் ராபர்ட்... பொது மக்களை சுட்டு கொல்லுங்கள் என்று Colonel Reginald Dyerக்கு அறிவுரை கொடுத்தவர்...அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் செங்காடு கிராமத்திற்கு மாற்றப்படுகிறார்...செங்காடு கிராம மக்களை அடிமைப்படுத்தி பயமுறுத்தி வேலை வாங்குகிறார்....
ஒரு புறம் ராபர்டின் சர்வாதிகாரத்தால் பாதிக்கப்படும் செங்காடு கிராமம் இன்னொரு புறம் ராபர்டின் மகன் ஜஸ்டினால் பாதிக்கப்படுகிறது...ஜஸ்டின் காம வேட்கை கொண்டவர்... பருவமடையும் பெண்களை அந்தரங்கத்துக்கு கட்டாயப்படுத்துபவர்.... இதன் காரணமாகவே அங்குள்ள பெண்களுக்கு ஆண் வேடம் போட்டு விடுகின்றனர் செங்காடு கிராம மக்கள்... எதையும் எதிர்த்து கேட்க தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள் செங்காடு கிராம மக்கள் ...பய உணர்வு அவர்களை ஆட்டுவிக்கிறது...
ராபர்டுக்கு கொஞ்சம் நெருக்கமானவர் பண்ணையார் ...பண்ணையார் ஒன்றும் அவ்வளவு தைரியமானவர் அல்ல....கிட்டத்தட்ட விபச்சார தரகர் போலத்தான் இருக்கிறார்...ஜஸ்டின் எனக்கு இந்த பெண் இன்றிரவு வேண்டுமென்றால் அதனை ஏற்பாடு செய்து கொடுப்பவர் பண்ணையார்...ராபரட்டையோ ஜஸ்டின்யோ எதிர்ப்பதற்கு பண்ணையாருக்கும் பயம்... எங்கே தனது மகள் பருவம் அடைந்தால் ஜஸ்டின் தனது மகளை அடைய விரும்புவானோ என நினைத்து தனது மகளுக்கு பத்து வயது இருக்கும்போதே அவள் இறந்து விட்டதாக ஊர் மக்களையும் ராபர்டையும் நம்ப வைக்கிறார்...ஊருக்கு தனது மகள் உயிருடன் இருப்பது தெரிந்தால் அவர்களே பண்ணையாரை பழி வாங்குவதற்காக அவரது மகளை ஜஸ்டினிடம் காட்டிக்கொடுத்து விடுவார்கள் என நினைப்பதால் ஊருக்கும் தெரியாமல் தனது மகளை தனது வீட்டிலேயே ரகசியமாக வளர்க்கிறார்....ராபர்ட்டோடு பண்ணையார் நட்புடன் இருப்பதற்கு காரணம் உண்டு...சுதந்திரம் கிடைத்தால் 300 வருடத்திற்கு முன்பு பண்ணையார் குடும்பம் ஆங்கிலேயரிடம் இழந்த ஆயிரம் ஏக்கர் நிலத்தை திரும்ப பெற்று மீண்டும் அதிகாரம் செலுத்தலாம் என நினைக்கிறார் பண்ணையார்...
பரமன்...கொஞ்சம் தைரியமானவன்....சிறு வயதிலிருந்தே பண்ணையார் மகள் மீது பாசமும் காதலும் கொண்டவன்....சிறு வயதில் அவன் அம்மா இறந்து விட, அவன் அம்மாவை போலவே பண்ணையார் மகள் அவன் மீது பாசம் காட்டுகிறாள்...அதனால் பரமனுக்கு பண்ணையார் மகள் மீது அக்கறை, பாசம் மற்றும் காதல்...பண்ணையார் மகளை ஒரு தலையாக காதலிக்கிறான்...பண்ணையார் மகள் உயிருடன் இருப்பது பரமனுக்கும் அவனது நண்பனுக்கும் (புகழ்) மட்டும் தெரியும்.
ஒரு கட்டத்தில் பண்ணையார் உயிருடன் இருப்பதை கண்டறிகிறான் ஜஸ்டின்.. .அதன் பிறகு என்னவானது?
ஒரு கட்டத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்கிறார் ராபர்ட்...சுதந்திரம் கிடைக்கப்போகிறது என்கிற செய்தி செங்காடு கிராமத்துக்கு தெரிந்தால் அவர்கள் இது நாள் வரை அளித்து வந்த பயம் கலந்த மரியாதையை இனி தரமாட்டார்கள் என நினைக்கும் ராபர்ட் சுதந்திரம் பெற்ற செய்தியேயே மறைக்க நினைக்கிறார்...இந்த விஷயம் தெரிந்த பரமனின் நண்பன் (புகழ்) நாக்கை அறுக்கிறார்...விஷயம் தெரிந்த வியாபாரியை (டெலிபோன் ராஜ்) கொல்கிறார்...
ஒரு கட்டத்தில் பண்ணையார் மகள் உயிருடன் இருப்பது ஊருக்கு தெரிந்து விடுகிறது....அதன் பிறகு என்னவானது? கிராமத்துக்கு விடுதலை கிடைத்த விஷயம் தெரிந்ததா? எப்படி தெரிந்தது? அதுதான் ஆகஸ்ட் 16 1947.
ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு பயந்து கிடக்கும் கிராமம் ஒன்று பய உணர்வை தகர்த்தெறிந்து தைரியமாக ஆங்கிலேயர்களை, குறிப்பாக கொடுமைப்படுத்தும் ஓர் ஆங்கிலேயனை எதிர்த்து நிற்பதே கதை.
பலம்:
* Period filmக்கு தேவைப்படும் மேக்கிங் படத்தில் உள்ளது...நன்று.
* கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து கொண்டு அதனை உள்வாங்கி ராபர்ட்டாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் Richard Ashton.
* சிறிய கதாபாத்திரமோ அல்லது பெரிய கதாபாத்திரமோ, பாத்திரத்திற்கேற்றார் போல் அவரவர் நடிப்பு இருந்தது...கெளதம் கார்த்திக், புகழ், மதுசூதன் ராவ், ரேவதி சர்மா, ஜேசன் ஷா, டெலிபோன் ராஜ், டி. எஸ். ஆர். ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் நன்றாக நடித்துள்ளனர். குறிப்பாக புகழ் நன்றாக நடித்துள்ளார்...காமெடியிலும் சீரியஸ் காட்சிகளிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்... புகழின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம் ஆகஸ்ட் 16 1947.
* வெளி உலகு தொடர்பில்லாத கிராமத்து மக்களின் வெள்ளந்தித்தனத்தை நன்றாக சித்தரித்துள்ளார் இயக்குனர் என். எஸ். பொன்குமார்
* எஸ். கே. செல்வகுமாரின் ஒளிப்பதிவு நன்று.
* விறுவிறுப்பாக திரைக்கதை நகராவிட்டாலும் படம் போரடிக்காமல் செல்கிறது.
* படத்தின் முடிவு பார்வையாளர்கள் எதிர்பார்ப்பது போன்று இருந்தது.
* ஆகஸ்ட் 15 என்றால் கொடியேற்றி மிட்டாய் சாப்பிடுவதுதான் என்று இன்றும் பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர்...பலருக்கு சுதந்திரத்தின் முக்கியத்துவம் தெரியாது... சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்கு புரிய வைக்கும் வகையில் திரைக்கதை இருந்தது.
* பின்னணி இசை நன்று
பலவீனம்:
* படத்தில் விறுவிறுப்பு இல்லை
* இது சுதந்திர போராட்ட படமா அல்லது காதல் கதையா என்று எண்ணும் அளவிற்கு திரைக்கதையில் கொஞ்சம் குழப்பம்....
* முடிவு பார்வையாளர்கள் எதிர்பார்ப்பது போன்று இருந்தாலும், சுதந்திர எழுச்சிக்கான காட்சிகள் படத்தில் வலுவாக இல்லை.
Overall, Good Directorial Debut for N.S. Ponkumar!!!
Maximum Ratings: 3.25 * stars
Minimum Ratings: 3 * stars
Score card: 50 to 40/100
Value: Good to Watchable
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Comments
Post a Comment