அயோத்தி
மதத்தை கடந்த மனித நேயம் மற்றும் சக உதவி குறித்து அயோத்தி பதிவு செய்கிறது. Good.
பல்ராம்(Yashpal Sharma) காசியில் வசிப்பவர். இறந்தவர்களுக்கு தெவசம் செய்து கொடுப்பவர். மதவாதி. மூர்க்கர். ஆண் ஆதிக்கவாதி. தனது வீட்டு குடும்ப பெண்களை (Anju Asrani and Preethi Asrani) புரிந்து கொள்ளாதவர். தீபாவளிக்கு குடும்பத்துடன் ராமேஸ்வரம் செல்கிறார்கள் பல்ராம் குடும்பத்தினர். மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு டாக்சியில் செல்லும் போது பல்ராமின் பிடிவாதத்தாலும் அவசரத்தினாலும் டாக்சி விபத்துக்குள்ளாகிறது. அந்த விபத்தில் பல்ராமின் மனைவி ஜானகி இறந்து விடுகிறார். அவரை காசிக்கு எடுத்து செல்ல ஏகப்பட்ட formalities. டாக்சி ஓட்டுனரின் நண்பரான அப்துல் மாலிக் (சசிகுமார்) பல்ராம் குடும்பத்துக்கு உதவ முன்வருகிறார். Post mortem, embalming என பல formalitiesஐ கடந்து ஜானகியின் உடலை காசிக்கு எடுத்து செல்ல உதவுகிறார். மூர்க்கராக இருக்கும் பல்ராம் தனது தவறை உணருகிறார்...ஆண் ஆதிக்கத்தால் தனது மனைவியை பல முறை காயப்படுத்தியிருப்பதை நினைத்து வருந்துகிறார்... மாலிக் செய்யும் உதவி, தீபாவளி என்றும் பாராமல் formalitiesஐ முடித்து கொடுக்க வரும் நல்லுள்ளங்கள் மற்றும் பல்ராம் மனதில் ஏற்படும் மனமாற்றமே அயோத்தி.
சசிகுமார், ப்ரீத்தி அஸ்ராணி, யஷ்பால் ஷர்மா, புகழ், அஞ்சு அஸ்ராணி மற்றும் மாஸ்டர் அத்வைத் வினோத் நன்றாக நடித்துள்ளனர்.
ப்ரீத்தி அஸ்ராணி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது தந்தையிடம் கோபப்படும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார் ப்ரீத்தி அஸ்ராணி.
மாஸ்டர் அத்வைத் வினோத் நன்றாக நடித்துள்ளார்.
Minimum Ratings: 3 * stars
Score card: 50 to 40/100
Value: Good to Watchable
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Comments
Post a Comment