Dada box

 டாடா



காதலும் கஷ்டமான பொருளாதார சூழலும் சந்திக்கும் போது அங்கே வலி குழந்தையாக பிறக்கும்.

பொருளாதார சூழ்நிலை காரணமாக ஏற்படும் வலியை சுமந்து கொண்டு, அன்பையும் காதலையும் சுமந்து கொண்டு தனது குழந்தையை வளர்க்கும் ஓர் தந்தையின் கதையே டாடா.

மணிகண்டனும் (Kavin) சிந்துவும் (Aparna Das) கல்லூரியில் காதலிக்கிறார்கள். சிந்துவை மணிகண்டன் கர்ப்பமாக்குகிறார். சிந்து கருவை வளர்க்கலாம் என சொல்கிறார். மணிகண்டன் கருவை கலைக்கலாம் என சொல்கிறார். விஷயம் தெரிந்து இரு வீட்டு பெற்றோரும் இருவருக்கும் ஆதரவு அளிக்காமல் போகிறார்கள். நண்பனின் வீட்டில்  இருவரும் தங்கி கொள்கிறார்கள். Bachelors வந்து போகும் வீடாக இருப்பதால் வாடைக்குக்கு வேறொரு வீடு பார்க்கலாம் என சிந்து சொல்கிறார்.

வேறொரு வீட்டிற்கு செல்கிறார்கள். பத்தாயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு போகிறார் மணிகண்டன். கடினமான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். ஒரு நாள் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்...இனி நான் குடிக்க மாட்டேன் என்று பிறக்க போகும் குழந்தையின் மீது சத்தியம் செய் என சிந்து சொல்ல அதற்கு ஓகே சொல்கிறார் மணிகண்டன். ஆனால் மறுபடியும் குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறார்...இது இருவருக்கிடையே விரிசலை உண்டாக்குகிறது. அடிக்கடி ஏற்படும் சலசலப்பின் காரணமாக சிந்து போன் செய்தால் அதனை எடுக்காமல் இருக்கிறார் மணிகண்டன்...ஒரு நாள் பிரசவ வலி வந்து சிந்து போன் செய்ய போன் காலை எடுக்காமல் போகிறார் மணிகண்டன்...ஒரு கட்டத்தில் விவரம் அறிந்து மருத்துவமனைக்கு செல்கிறார்...குழந்தையை பெற்றெடுத்து விட்டு, குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு சிந்து அங்கிருந்து கிளம்பி செல்கிறார்...சிந்து தனது பெற்றோர் வீட்டில் இருப்பாரோ என நினைத்து அங்கே செல்ல, அங்கே அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிடுகிறார்கள்...

குழந்தையை தனியாய் வளர்க்கும் சூழ்நிலை மணிகண்டனுக்கு ஏற்படுகிறது....முதலில் குழந்தையை அனாதை ஆசிரமம் ஒன்றில் சென்று விடுகிறார்...மனசாட்சி உலுக்குகிறது...குழந்தையை எடுத்து கொண்டு வந்து வளர்க்க ஆரம்பிக்கிறார்...நான்கு வருடம் கழித்து ஒரு IT கம்பெனியில்  வேலைக்கு செல்லும் மணிகண்டன் மீண்டும் அங்கே சிந்துவை சந்திக்கிறார்...கருவை கலை என்று சொன்ன மணிகண்டன் குழந்தையை வளர்க்கிறார்.... குழந்தை வேண்டும் என்று சொன்ன சிந்து குழந்தையை மருத்துவமனையில் விட்டு செல்கிறார்...சிந்து எங்கு சென்றார்? அவர் ஏன் குழந்தையை மருத்துவமனையில் விட்டு சென்றார்? உண்மையில் என்ன நடந்தது? அதுவே டாடா

Fatherhood +Love story

Kavin and Aparna Das are central characters.

Kavin, Aparna Das, Master ilan arjunan, Harish K, VTV Ganesh, Pradeep Antony, Fouziee, Bhagyaraj and Aishwarya Bhaskaran are key performers.

Background score of Ben Martin is good.

Good performance from Kavin.

Aparna Das has performed well in climax.

குறைந்த பட்ஜெட்டில் நல்ல படம்.

கதையும் களமும் வேறாக இருந்தாலும் இயக்குனர் பாக்யராஜ் இயக்கிய மௌன கீதங்கள் படத்தை டாடா நினைவுபடுத்தியது.

மணிகண்டனுக்கும் சிந்துவுக்கும் இடையிலான காதல் காட்சிகள் படத்தில் ஆழமாக இல்லை. ஆழமாக இருந்திருந்தால் திரைக்கதை இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.

Dada-> Different & Beautiful... Fatherhood & Love story

Maximum Ratings: 3.5* stars

Minimum Ratings: 3.25 *stars

Score card: 60 to 50/100

Value: Very Good to Good 

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre


Comments