Yaathisai box

யாத்திசை

விமர்சனம் 





ஒரு சிறிய இனக்குழு பேரரசை எதிர்க்க துணிகிறது...அந்த போரின் முடிவு என்னவானது? அதுவே யாத்திசை.

யாத்திசை வரலாற்று படமல்ல.... வரலாற்று கற்பனை படம்... இயக்குனர் தரணி ராசேந்திரனின் முயற்சி பாராட்டுக்குரியது... A war drama film... குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட போர் படம். தரமான படைப்பை கொடுக்க முயற்சித்துள்ளனர். பழம் பெரும் தமிழில் வசனங்கள் எழுதப்பட்டது பாராட்டுக்குரியது.

கதை ஏழாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. பாண்டியர்களும் சோழர்களும் பேரரசர்கள். பேரரசர்களுக்கு  கூட்டணி படைகள் உண்டு. உதாரணத்திற்கு, பாண்டியர்களுக்கு பள்ளிகள் கூட்டணி படை. அதே போல சோழர்களுக்கு எயினர் கூட்டணி படை. சேர சோழர்களை வெற்றி கொண்டு பேரரசாக ஆட்சி செய்கிறார் பாண்டிய அரசர் ரணதீரன். சோழர்கள் காடுகளுக்குள் பதுங்கியிருக்கிறார்கள். சேர தேசத்து போர் வீரர்கள் அடிமையாக நடத்தப்படுகிறார்கள்... சேர மன்னன் நாடு கடத்தப்படுகிறார்.... சோழர்களோடு கூட்டணி படையாக செயல்பட்ட சிற்றரசர்கள் மற்றும் இனக்கூட்டங்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அப்படி ஒடுக்கப்பட்ட ஓர் இனக்குழுதான் எயினர். நிலமின்றி நாடின்றி காட்டில் வேட்டையாடி பிழைத்து வருகிறார்கள்...தங்கள் இனக்குழுவுக்கு நிலம் மற்றும் அரசாங்கம் வேண்டுமென நினைக்கிறார் எயினர் கூட்டத்து தலைவன் கொதி...சோழ தலைவர் உரியை  கண்டு நிலம் , அரசாங்கம் மற்றும் வரி விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்...தங்களது படையை கொண்டு கோட்டையில் உள்ள ரணதீரனை வீழ்த்துவதாகவும், கோட்டையை கைப்பற்றி தூது அனுப்பவதாகவும் கூறுகிறார் கொதி. கோட்டையை கைப்பற்றினால், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சோழ படையை அனுப்பவதாக உரி கூறுகின்றார்.

போருக்கு தயங்கும் எயினர் கூட்டத்திற்கு உத்வேகம் அளிக்கிறார் கொதி....உத்வேகம் அளித்து அவர்களை போருக்கு தயார்ப் படுத்துகிறார்...கள பலி கொடுத்து போருக்கு தயாராகின்றனர் எயினர்கள். முதல் அடியில் வெற்றி பெறுகிறார் கொதி.... பாண்டிய மன்னன் ரணதீரனை தாக்க முயற்சித்து கோட்டையை கைப்பற்றுகிறார்...

ரணதீரன் தப்பித்து விடுகிறார்...தப்பித்து பள்ளிகளை நாடுகிறார்...
பள்ளிகள் கூட்டத்து தலைவி ஓர் கோரிக்கையை வைக்கிறார்.... தங்களது இன பெண்ணை ரணதீரன் மணந்து கொண்டால் அவருக்கு தேவைப்படும் படையை தருவதாக கூற, ரணதீரன் அதற்கு சம்மதிக்கிறார்...அதற்கு காரணம் அதிகாரம்... இரண்டாவது மனைவியாக அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்....
பாண்டிய படையை குறைத்து மதிப்பிடுகிறார் கொதி ... ஆயிரக்கணக்கான வீரர்களுடன் கோட்டை வாசலுக்கு வருகிறார் ரணதீரன்...வரும் வழியில் எயினர் படை  தாக்கப்படுகிறது...பள்ளிகள் எயினர் படை வீரர்களை கொன்று குவிக்கிறார்கள்....சோழர்களுக்ளு செய்தி அனுப்ப நினைக்கும் ஒற்றர்களையும் கொல்கிறார்கள்...இதனால் என்ன நடக்கிறது என்கிற செய்தி சோழர்களுக்கு தெரியாமல் போகிறது.... கோட்டையை சுற்றி ரணதீரனின் படை சூழ்ந்திருப்பதை அறியும் கொதி, ரணதீரனுக்கு ஒரு தூது அனுப்புகிறான்....அதில். நேரடியாக ஒற்றைக்கு ஒற்றை இருவரும் மோதுவோம்.... இருவரில் யார் ஜெயிக்கிறார்களோ அவருக்கே முடி என எழுதப்பட அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார் ரணதீரன்...ரணதீரணும் கொதியும் மோதுகிறார்கள்...அதில் கொதியை தோற்கடித்து கொன்று வெல்கிறார் ரணதீரன்...

ஒரு கட்டத்தில் சோழர்களுக்கு செய்தி போய் சேருகிறது...தங்களது படையை தயார்ப்படுத்துகிறார்கள் சோழர்கள்...அடிமையாக சென்ற சேரர்கள் கப்பலில் மீண்டும் தமிழகத்துக்கு திரும்புகிறார்கள்....கொதி முடிவல்ல....ஆரம்பம்....இரண்டாம் பாகத்துக்கு நம்மை தயார் செய்கிறார் இயக்குனர்...

பலம்:

* சண்டை & போர் காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளன
*அகிலேஷ் காட்டமுத்துவின் ஒளிப்பதிவு பலம்
* சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி மற்றும் குரு சோமசுந்தரம் நன்றாக நடித்துள்ளார்கள். சக்தி மித்ரன் மற்றும் சேயோனுக்கு இது முதல் படம்....முதல் படத்திலேயே இருவரும் முத்திரை பதித்துள்ளார்கள்...
*சக்ரவர்த்தியின் பின்னணி இசை நன்று
* தரணி ராசேந்திரனின் இயக்கம் நன்று... ஏழாம் நூற்றாண்டிற்கு நம்மை இழுத்து செல்கிறது.... சில காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளன....உதாரணத்திற்கு, களபலி கொடுக்கும் காட்சி மற்றும் போர் காட்சிகள்....
* எயினர் கூட்டத்திற்கான ஆடை வடிவமைப்பு நன்றாக அமைக்கப்பட்டுள்ளது....
* போராளியாகவும் வீரத்துக்கு எடுத்துக்காட்டாகவும் கொதியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. நன்று. 
* மகேந்திரன் கணேசனின் படத்தொகுப்பு நன்று
* சங்கத்தமிழில் வசனங்கள் அமைக்கப்பட்டிருந்தது புதுமையான ஓர் அனுபவத்தை கொடுத்தது...

பலவீனம்:

*கதைக்கேற்ற அல்லது கதைக்கு தேவைப்படும் பிரம்மாண்டம் திரைக்கதையில் இல்லை
*சில காட்சிகளில் CG செய்திருப்பது நன்றாகவே தெரிகிறது....
*Apacalypto மற்றும் 300 படங்களை தழுவி எடுத்தது போல் இருந்தது யாத்திசை
*வரலாற்று கற்பனை படமாக இருந்தாலும் சில வரலாற்று பிழைகள் படத்தில் இடம் பெற்றுள்ளன...இதுதான் வரலாறோ என்கிற தவறான எண்ணம் பார்வையாளர்களுக்கு எழ வாய்ப்புள்ளது....
* தேவரடியார் முறை குறித்து இயக்குனர் என்ன கூற வருகிறார் என்கிற கேள்வி எழுகிறது 
*களபலி கொடுக்கும் காட்சி நன்றாக படமாக்கபட்டிருந்தாலும் பலி கொடுக்கும் வழக்கத்தை யாத்திசை விதைக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது....

மொத்தத்தில், புதிய அனுபவத்தை கொடுக்கிறது யாத்திசை. நன்று!!! 

Maximum Ratings: 3.5 * stars
Minimum Ratings: 3.25 * stars
Score card: 60 to 50/100
Value: Very Good to Good 

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre


Trailer 



ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. ஆவலுடன் காத்திருக்கிறேன் யாத்திசை படத்தை காண.


Comments