ஜாதிய அரசியலை ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கிறது மாமன்னன்.
ஒடுக்கப்பட்ட மக்களை வைத்து நடத்தப்படும் ஓட்டு வங்கி அரசியலையும், அரசியல் தலைவர்களுக்கு இருக்க கூடிய ரெட்டை தன்மையையும், ஜாதிய வெறியையும் அழுத்தமாக பதிவு செய்கிறது மாமன்னன். இன்றளவும் ஜாதிய சிந்தனையோடு செயல்படும் சில அரசியல்வாதிகள் குறித்து மாமன்னன் பதிவு செய்கிறது.
ஓடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஒருவரை அடையாளப்படுத்தி, அவரை தேர்தலில் நிற்க வைத்து தேர்தலில் வெற்றியை பெறுவது. அரசியல் தேவைக்காக அந்த நபரை பயன்படுத்தி அவரை உண்மையில் தனக்கு கீழே உள்ள ஓர் அடிமை போல கருதும் ஜாதிய மனப்பாங்கு குறித்து மாமன்னன் பதிவு செய்கிறது.
பலம்: 1. நடிப்பு...உதயநிதி, வடிவேலு மற்றும் பஹத் பாசில்...மூவரும் போட்டி போட்டு கொண்டு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்...
ரவுத்திர குணம் கொண்ட அதிவீரனாக உதயநிதி நன்றாக நடித்துள்ளார்."அப்பா நிக்காதீங்க...உக்காருங்க" என்று கூறும் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.
தனது மகனுக்கும் அவனது நண்பர்களுக்கும் நேர்ந்த அநீதிக்கு நியாயம் வாங்கி தர முடியாமல் போகும் காட்சியில் வடிவேலு நன்றாக நடித்துள்ளார். வலி, இயலாமை, கோபம் என பல்வேறு உணர்வுகளை தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதிகாரம் தனக்கான உரிமை என்றுணராத, பிறகு அதிகாரம் தனக்கான உரிமை என்றுணரும் மாமன்னன் கதாபாத்திரத்தில் வடிவேலு நன்றாக நடித்துள்ளார்.
ஜாதி வெறி கொண்ட ரத்தினவேலாக பஹத் பாசில் மிரட்டுகிறார் .
2. ஏ. ஆர். ரஹமானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள். ஒவ்வொரு பாடலிலும் variety காண்பித்துள்ளார் ஏ. ஆர். ரஹமான். பின்னணி இசை பலமாக அமைந்துள்ளது.
3. தேனீ ஈஸ்வரின் ஒளிப்பதிவு... மாரி செல்வராஜ் எண்ண ஓட்டத்தை அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார் தேனீ ஈஸ்வர்.
4. "எப்போதும் நின்னுட்டு பேசாதீங்க...உட்கார்ந்து பேசுங்க"
"அப்பா நிக்காதீங்க...உக்காருங்க"
"நாம கேள்வி கேட்கவே ஒரு பதவிக்கு ஒரு இடத்துக்கு வர வேண்டியிருக்கு"
"ஏழைகள் கோபப்படவே இங்க தகுதி தேவைப்படுது"
"யுத்தம்னு வந்துட்டா பகை இருக்கக்கூடாது"
வசனங்கள் நன்றாக எழுதப்பட்டுள்ளன..
5.கீர்த்தி சுரேஷ், சுனில் ரெட்டி, அழகம்பெருமாள், லால், ரவீனா ரவி மற்றும் கீதா கைலாசம் தங்களது scopeல் நன்றாக நடித்துள்ளார்கள்.
6. திரைக்கதையில் peak points இருந்தது... Interval காட்சி அதற்கோர் உதாரணம்....
பலவீனம்:
மொத்தத்தில் ஜாதிய அரசியலை ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கிறது மாமன்னன்.
Maximum Ratings: 3.5 * stars
Minimum Ratings: 3.25 *stars
Score card: 60 to 50/100
Value: Very Good to Good
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Kodi parakura kaalam
A Beautiful song on women empowerment.
Trailer
ஜாதிய கொடுமைகள் மற்றும் ஜாதிய ஒடுக்குமுறைக்கெதிரான படைப்பாக மாமன்னன் இருக்கும் என்பது முன்னோட்டத்தில் தெரிகிறது. Eagerly waiting to watch Maamannan.
Manna Maamanna
Manna Maamanna is Energetic. Theru Kural Arivu Rocks the song.
Nenjame Nenjame
A Beautiful song in Vijay Yesudas and Sakthishree gopalan voice. Yugabharathi has penned the lyrics beautifully.
Jigu Jigu Rail
நான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான் உதடுகள் ஓட்டும் என்கிற கலைஞரின் வாசகத்திற்கு ஏற்றார் போல ஜிகு ஜிகு ரயில் பாடல் அமைந்துள்ளது. ஏ. ஆர். ரஹமான் அருமையாக பாடியுள்ளார்.
A.R. Rahman dance is Qute. Good Choreography by Sandy.
Rasa kannu
அருமையாக பாடியுள்ளார் வடிவேலு. அருமையாக இசையமைத்துள்ளார் ஏ ஆர் ரஹமான். அருமையாக வரிகளை அமைத்துள்ளார் யுக பாரதி.
First look
Comments
Post a Comment