Maaveeran box

மாவீரன் 

விமர்சனம் 




ஒரு கோழையை/தைரியமற்றவனை அசரீரி/இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி வீரனாக மாற்றுகிறது. அந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி, சாத்தான் போன்ற ஒருவனோடு இந்த தைரியமற்றவனை மோத வைக்கிறது. இதுதான் மாவீரன் படத்தின் ஒன் லைன். அதனை சுவாரஸ்யமாக நகைச்சுவை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் மடோனா அஷ்வின். 

குப்பத்தில் வசிக்கும் மக்களுக்கு அபார்ட்மெண்ட் கட்டி தருகிறார் அமைச்சர் ஜெயக்கொடி (மிஷ்கின்). அதற்கு "மக்கள் மாளிகை" என்று பெயர் சூட்டப்படுகிறது. முதலில் மகிழ்ச்சியாக அங்கு செல்லும் மக்கள், பிறகுதான் கட்டித்தரப்பட்ட அபார்ட்மெண்ட் தரமற்றது என்பதை கண்டறிகின்றனர். 

கார்ட்டூன் கதைகளை வரைய ஆர்வம் கொண்டவர் சத்யா (சிவகார்த்திகேயன்). தினத்தீ பத்திரிக்கைக்காக கார்ட்டூன் கதைகளை வரைகிறார். உழைத்தவன் ஒருவன் பேர் வாங்குபவன் இன்னொருவன் என்பது போல சத்யா வரைய, அதனை தான் வரைந்ததாக கூறி இன்னொருவர் தனது பெயரை போட்டு கொள்கிறார். இது ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது. சத்யாவுக்கு கார்டூனிஸ்டாக வேலை கிடைக்கிறது. சாதுவாக இருக்கும் அம்பி அந்நியனாய் மாறுவது போல, கோழையாய் இருக்கும் சத்யா தனது வீரத்தை கார்டூனில் காண்பிக்கிறார். தனது வாழ்வில் நடக்கும் அன்றாட சம்பவங்களை தட்டி கேட்க முடியாமல், அதனை கார்டூனாக வரைந்து சம்பாதிக்கிறார். 

எதுக்கு வம்பு...எதுவாக இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகலாமே என்றிருக்கும் நபர்தான் சத்யா. இந்த மனப்பான்மையால் அவர் துன்பத்திற்கு ஆளாகிறார். எதையும் தட்டி கேட்க முடியாமல் யாரையும் எதிர்த்து பேசாமல் அட்ஜஸ்ட் செய்து கொண்டே போகலாம் என்று நினைக்கும் சத்யா ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என மொட்டை மாடிக்கு செல்கிறார். காரணம், சத்யாவின் தங்கை குளித்து கொண்டிருக்கும் போது இன்ஜினியர் ஒருவன் அநாகரீகமாக எட்டி பார்க்கிறான். அவனை தட்டி கேட்க முடியாமல் சத்யா போகிறார். வாழ்க்கையை முடித்து கொள்ளலாம் என நினைக்கும் போது அவருக்கு தங்கையிடமிருந்து போன் கால் வருகிறது. தங்கைக்காகவும் தாய்க்காகவும் வாழலாம் என நினைக்கும் போது கால் தடுக்கி மொட்டை மாடியிலிருந்து கீழே விழுகிறார். கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்கு செல்கிறார். அந்த சம்பவத்தின் போது சத்யாவிற்கு சில மாற்றங்கள் நிகழ்கின்றன. Supernatural force போன்ற ஓர் சக்தி, குரலாக சத்யாவின் inner voiceஆக ஒலிக்கின்றனது. நடக்கப்போவதை முன் கூட்டியே அந்த குரல் சத்யாவிற்கு தெரியப்படுத்துகிறது. அந்த குரல் அமைச்சர் ஜெயக்கொடியோடு சத்யாவை மோத வைக்கிறது. அதன் பிறகு என்னவானது? அதுதான் மாவீரன். 

கட்டிட ஊழல் குறித்து மாவீரன் பதிவு செய்கிறது.  

பலம்: 

1. "If it can be written, or thought, it can be filmed." என்று இயக்குனர் Stanley Kubrick கூறியுள்ளார். அந்த வாசகம்தான் மாவீரன் படம் பார்க்கும் போது எனக்கு நினைவுக்கு வந்தது.  திரைக்கதையை தெளிவாக அமைத்துள்ளார் இயக்குனர் மடோனா அஷ்வின். ஒரு பார்வையாளராக அவரது க்ரியேடிவிட்டியை ரசித்தேன். மாவீரன் க்ரியேட்டிவாகவும் தொழில்நுட்ப ரீதியாக செழுமையாகவும் இருந்தது. Maaveran was a film where Creativitiy and Technicality met each other.  ஒரு கிரியேட்டிவ் ஸ்க்ரிப்டுக்கு தேவைப்படும் Technicality படத்தில் இருந்தது. அதனை திறம்பட கையாண்டுள்ளார் இயக்குனர் மடோனா அஷ்வின். ஒரு சீரியசான கதையை நகைச்சுவை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் மடோனா அஷ்வின்.

2. விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு நேர்த்தியாக இருந்தது. 

3. கதையின் சூழ்நிலைகளுக்கேற்றவாறு  சண்டை காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன. 

4. சிவகார்த்திகேயன் நன்றாக நடித்துள்ளார். Scores in performance and timing sense. 

5. Maaveran has Good casting and Actors have been utilised effectively. சரிதா, மிஷ்கின் மற்றும் சுனில் நன்றாக நடித்துள்ளனர். 

6. யோகி பாபுவின் காமெடி எடுபடுகிறது மற்றும் நன்றாக உள்ளது. 

7. விஜய் சேதுபதியின் குரல் கதைக்கு பலம். 

8. பரத் ஷங்கரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் நன்று. 

9. அதிதி ஷங்கர் தனது ஸ்கோப்பில் நன்றாக நடித்துள்ளார். கதையில் அவருக்கு இன்னும் space கொடுத்திருக்கலாம்.

10.  ஒரு நல்ல Entertainerஆக  மாவீரன் வந்திருக்கிறது 

பலவீனம்: 

1. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். ஜெயக்கொடி இறக்கும் காட்சியிலேயே படம் முடிகிறது. ஹீரோயிசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக குழந்தையை காப்பாற்றும் காட்சி வைக்கப்பட்டுள்ளது. அது படத்தின் நீளத்தை அதிகரிக்கிறது. 

2. ஒரு Entertainerஆக மாவீரனை ரசிக்கலாம். ஆனால் ஆழமான அரசியலை மாவீரன் பேசவில்லை. உதாரணத்திற்கு கட்டிட ஊழலில் எவ்வாறு முறைகேடுகள் மற்றும் ஊழல் நடக்கின்றன என்பதை இயக்குனர் ஆழமாக பதிவு செய்திருக்கலாம்.

3. குடிசை மாற்று வாரியம் குறித்து தேவையற்ற அவநம்பிக்கையை மாவீரன் ஏற்படுத்துகிறது. முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்பு அரசாங்கத்தால் கட்டி தரப்பட்ட வீடுகள் இன்றும் வலுவாக இருக்கின்றன. அரசாங்கம் ஒதுக்கிய வீட்டை வாடகைக்கு விட்டு அதில் சம்பாதிக்கும் நபர்கள் இங்கு ஏராளம். குடிசை மாற்று வாரியம் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் கருத்துக்கள் முற்றிலும் உண்மையல்ல. 

Overall Maaveeran is a Good Socio Political Entertainer!!!

Maximum Ratings: 3.5 * stars

Minimum Ratings: 3.25 * stars

Score card: 60 to 50/100

Value: Very Good to Good

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre


Maaveeran Trailer 


அரசியல்....ஊடகவியல்...கார்ட்டூன்... கதை... காமெடியும் ஆக்ஷனும் கலந்த படமாக மாவீரன் இருக்கலாம் என்பது ட்ரைலரிலே தெரிகிறது. 

Vannarapettayila 


A Cool song from Aditi Shankar and Sivakarthikeyan. 

 Scene ah Scene ah


Good composition by Bharath Shankar. Scene ah Scene ah has foot tapping beats. Anirudh has sung energetically. 

Comments