A Letter to Rajini sir and Director Shiva. Feedback about Annathe



அன்புள்ள ரஜினி சார் மற்றும் இயக்குனர்  சிவா அவர்களுக்கு, 

வணக்கம்!!!

வெகு நாட்களாக அண்ணாத்தே படம் குறித்த எனது Feedbackஐ பகிர வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன். இன்றுதான் அதற்கான சந்தர்ப்பம்  கிடைத்தது.

180 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அண்ணாத்தே படம்  240 கோடி ருபாய் வசூல் ஈட்டியது. அண்ணாத்தே வெற்றி படமுமல்ல. தோல்வி படமுமல்ல. It was a below average movie. 

அண்ணாத்தே நிறைய எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. ஏன்? சில காரணங்கள்...

1. ரஜினிக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் இடையிலான உறவுமுறை நம்பும்படி இல்லை.  காளையனாக நடித்த ரஜினிக்கும், தங்க மீனாட்சியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கும் இடையிலான Age gap மிகவும் பெரிதாக தெரிந்தது.... ரஜினிக்கு மகளாகவோ அல்லது தாய் மாமன் உறவு போன்றோ கதையை வடிவமைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.. தாய்க்கு நிகரான ஓர் உறவு தாய் மாமன் உறவு என்று சொல்வார்கள். .கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி தாய் மாமன் உறவு என்பது போன்று கதையை நகர்த்தியிருந்தால்  படம் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கும். ரஜினிக்கு கீர்த்தி சுரேஷ் தங்கச்சி என்பது நம்பும்படியில்லை....

2. படத்தில் வில்லன் கதாபாத்திரங்கள் வலுவாக இல்லை..

3. திரைக்கதை ஊகிக்கும்படி இருந்தது. 

4.  சிவா இயக்கிய முந்தைய படங்களை அண்ணாத்தே ஆங்காங்கே நினைவுப்படுத்தியது .

5. நிறைய நடிகர்கள்...நிறைய கதாபாத்திரங்கள்....இருந்தும் அவர்கள் திரைக்கதையில் வலுவாக பயன்படுத்தப்படாதது படத்தின் பலவீனம்.

6. அண்ணாத்தே எமோஷனலாக கனெக்ட் ஆகவில்லை.Annathe didn't connect emotionally. 

I just felt like sharing my Feedback about Annathe. Thank you!!!

நன்றி!!! வணக்கம் !!!

R. Satish Kumar

Comments