DD Returns Review
A Time pass horror comedy that's entertaining and engaging!!!
வருடம் 1962...
1962ல் பாண்டிச்சேரியில் சூதாட்ட விளையாட்டு அரசாங்கத்தால் தடை செய்யப்படுகிறது. பாண்டிச்சேரியில் French castleல் வசிக்கும் Fernandes குடும்பம் ஊர் மக்களாலும் காவல்துறையாலும் கொல்லப்படுகின்றனர். அதற்கு காரணம் Fernandes குடும்பம் 52 நபர்களை ஒரு வினோத விளையாட்டின் மூலம் கொல்கிறார்கள் . அந்த வினோத விளையாட்டில் ஜெயித்தால் 50 மடங்கு பணம் கிடைக்கும். ஒரு வேளை தோற்றால் உயிர் போகும். இறக்கும் தருவாயில் Fernandes our Game is eternal என்று கூறி இறக்கிறார்.
வருடம்2023....
போலீசிடம் இருந்து தப்பித்து Professorம் (Rajendran) அவரது கும்பலும் ஒரு Antique shopற்குள் நுழைகிறார்கள். Antique shopல் கட்டு கட்டாக பணம் இருப்பதையும் அவை போதை பொருளை விற்றதால் வந்த பணம் என்பதையும் கண்டறிகிறார்கள். அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள் Professor கும்பல்.
Antique shopல் குழந்தையும்(Bipin) அவர் கும்பலும் அன்பரசிடமிருந்து (Fefsi Vijayan) பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகின்றனர். Wine shop, Hotels, Resorts, Bar என பல businessஐ செய்து வரும் அன்பரசு ஒரு ரவுடியும் கூட. அன்பரசு மகனுக்கு (Redin Kingsley) திருமணம். அந்த நாளில் பணத்தை கொள்ளையடிக்கலாம் என திட்டம் தீட்டுகின்றனர் குழந்தை கும்பல்.
சோபியா (Surbhi) சதீஷின் (Santhanam) கேர்ள் பிரெண்ட். சோபியாவின் அக்காவுக்கும் அன்பரசுவின் மகனுக்கும்தான் திருமணம் நடக்கவிருக்கிறது. எதிர்பாராவிதமாக சோபியாவின் அக்கா திருமண தினத்தன்று ஓடி போகிறார். இதனால் ஒரு நிபந்தனை விதிக்கிறார் அன்பரசு. திருமணத்திற்காக தான் கொடுத்த 25 லட்ச ரூபாயை சோபியாவின் குடும்பத்தினர் திருப்பி கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சோபியா தனது மகனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனையை விதிக்கிறார். வேறு வழியின்றி திருமணத்திற்கு ஒப்பு கொள்கிறார் சோபியா. இதனை தெரிந்து கொள்ளும் சதீஷ் அன்பரசுவின் மகனை காரில் கடத்துகிறார். அந்த காரை Professor திருடுகிறார். Profesorஇடமிருந்து அன்பரசு மகன் தப்பித்து வீட்டிற்கு செல்கிறார்.
திட்டமிட்டபடி அன்பரசு வீட்டிலிருந்து பணத்தையும் நகையையும் கொள்ளையடிக்கிறார்கள் குழந்தை கும்பல். குழந்தை கும்பலிடத்திலிருந்து அந்த பணத்தையும் நகையையும் Professor கும்பல் கொள்ளையடிக்கிறது. அந்த பணம் சதீஷுக்கு எதேர்சையாக கிடைக்கிறது. அதிலிருந்து 25 லட்ச ரூபாயை சோபியாவிற்கு கொடுத்து பணத்தை அன்பரசுவிடம் திருப்பி கொடுக்க சொல்கிறார். தனது வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைத்தான் சோபியா தன்னிடம் கொடுத்திருக்கிறார் என்பதை அன்பரசு கண்டுபிடிக்கிறார். சதீஷ்தான் அந்த பணத்தை தனக்கு கொடுத்ததாக சோபியா சொல்கிறார். மீதி பணத்தை அன்பரசு கேட்கிறார். அந்த பணத்தை French castle பங்களாவில் பத்திரப்படுத்தியிருப்பதாக சதீஷ் நண்பர்கள் கூறுகின்றனர். அந்த பணத்தை எடுக்க சதீஷும் அவர் நண்பர்களும் பாழடைந்த French castle பங்களாவுக்கு செல்கின்றனர். அவர்களை Fernandes குடும்பம் (பேய்கள்) வரவேற்கிறது.
நான்கு லெவெல்கள் கொண்ட வினோத விளையாட்டை ஆட அழைப்பு விடுக்கிறார் Fernandes.
Level 1-> Hide and Seek Level 2-> silence Level 3-> Maze Runner Level 4-> Win or Run
விளையாட்டை விளையாடாமல் வெளியே செல்ல முயன்றால் மரணம். விளையாடாமல் பணத்தை எடுத்து செல்ல முயன்றால் மரணம். இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி கொள்ளும் சதீஷும் அவர் நண்பர்களும் அந்த விளையாட்டை ஆட ஆரம்பிக்கிறார்கள். பணத்தை தேடி Professor கும்பலும், குழந்தை கும்பலும், அன்பரசு கும்பலும் பங்களாவிற்கு வருகிறார்கள். அவர்களும் பேய்களிடம் மாட்டி கொள்கிறார்கள். பேய்களிடம் மாட்டி கொள்ளும் சதீஷும் அவர் நண்பர்களும் விளையாட்டை முழுமையாக ஆடினார்களா? பேய்களிடமிருந்து தப்பித்தனரா? அந்த வினோத விளையாட்டில் வென்றது யார்? அதுவே DD Returns.
ஜாலியான டைம் பாஸ் பேய் படம்.
சந்தானம், சுரபி, லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி, பெப்சி விஜயன், ராஜேந்திரன், முனீஷ்காந்த், சாய் தீணா, தீபா ஷங்கர், ஸ்வாமிநாதன், லொள்ளு சபா மனோகர், டைகர் தங்கதுரை, கூல் சுரேஷ் மற்றும் பிபின் scores in comedy.
தனக்கு மட்டும் பெயர் வந்தால் போதும் என்று சுயநலமாக இல்லாமல் தன்னுடன் நடிக்க கூடிய நடிகர்களுக்கு திரைக்கதையில் நல்ல ஸ்கோப் கொடுக்க அனுமதித்துள்ளார் சந்தானம்.
பிரதீப் ராவத், மஸூம் ஷங்கர் மற்றும் மானஸ்வி கொட்டாச்சி பேய்களாக நன்றாக நடித்துள்ளனர்.
பின்னணி இசை நன்று
கலை வடிவமைப்பு நன்று.
ஒளிப்பதிவு நன்று.
பாடல்கள் சுமார்.
சந்தானம் நடித்ததிலேயே இந்த படம்தான் சிறந்த காமெடி படம் என்று கூற முடியாது. ஆனால் DD Returns நல்ல பொழுதுபோக்கு காமெடி பேய் படம். திரைக்கதை போரடிக்காமல் நகர்கிறது.
A Time pass horror comedy that's entertaining and engaging!!!
Maximum Ratings: 3.25 *stars
Minimum Ratings: 3 * stars
Score card: 50 to 40/100
Value: Good to Watchable
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Comments
Post a Comment