My Thoughts on Marakuma Nenjam concert incident/மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சம்பவம் குறித்து எனது கருத்துக்கள்
செப்டெம்பர் 10 2023, "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் வாங்கியும் உள்ளே செல்ல முடியாமல் பல ஆயிர கணக்கான மக்கள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
பெற்றோர்கள் குழந்தைகளை தற்காலிகமாக தொலைத்துள்ளனர்.
இளம் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளனர் . பாதிப்படைந்துள்ளனர். உயிர் பிழைத்து வந்தால் போதுமென்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எழுதுவதற்கே கூசுகிறது.... ஒரு பெண்ணின் மார்பகம் கூட்டத்தில் ஒரு கயவனால் கசக்கப்பட்டுள்ளது.... பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமையை நினைத்து பாருங்கள். இனி ஏ. ஆர். ரஹ்மான் என்று சொன்னாலோ அல்லது இசை நிகழ்ச்சி என்று சொன்னாலோ அந்த பெண்ணுக்கு தான் பாலியல் துன்பத்துக்கு உண்டான சம்பவம்தான் நினைவுக்கு வரும்.
People who went for the event have undergone Traumas. பார்வையாளர்கள்/ரசிகர்கள் தீவிர மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அளவுக்கு மீறி டிக்கெட் விற்றதால் ஏற்பட்ட குளறுபடி என்று பேசப்படுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சரியாக செய்யப்படாததால் ஏற்பட்ட குளறுபடி என்று பேசப்படுகிறது.
இடத்தின் கொள்ளவோ இருபதாயிரம். விற்கப்பட்ட டிக்கெட்டுகளோ முப்பத்து ஆறாயிரம் என பேசப்படுகிறது.
பார்க்கிங்கில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பேசப்படுகிறது. அதோடு மட்டுமின்றி பார்க்கிங் வசதியும் சரியாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்று பேசப்படுகிறது. காரை பார்க்கிங் இடத்திலிருந்து வெளியே எடுக்க சிலருக்கு ஆறிலிருந்து ஏழு மணி நேரம் ஆகிவிட்டது என்று பேசப்படுகிறது.
Restroom/Washroom facilities சரியாக இல்லை என பேசப்படுகிறது.
பார்வையாளர்கள் தரப்பிலிருந்து சற்று சிந்திக்க வேண்டும். அதிக விலை கொடுத்து டிக்கெட்களை வாங்கியுள்ளார்கள். ருபாய் 500, ருபாய் 5000, ருபாய் 25000, ருபாய் 50000, ருபாய் 100000 என டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இந்த டிக்கெட்டுகளை வாங்குபர்கள் Upper Middle Class and Middle class மக்கள். ருபாய் 5000 என்பது பலருக்கு பெரிய தொகை. ஒரு குடும்பத்தில் 4 பேர் என்றால், 5000 * 4 என்பது இருபதாயிரம் ருபாய். பெரிய தொகை. ருபாய் 25000 என்பது பெரிய தொகை. ருபாய் 50000 என்பது பெரிய தொகை. Although the Tickets are expensive, people have bought the Tickets because of the Love they have for A.R. Rahman. பெரிய தொகை கொடுத்து டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை காண முடியவில்லை. கூட்ட நெரிசல். தள்ளு மல்லு. போதும்டா சாமி என்கிற சிந்தனைக்கு பார்வையாளர்கள் வந்துவிட்டார்கள். டிக்கெட் வாங்கியவர்கள் அம்பானியோ அதனியோ கிடையாது. உழைக்கும் வர்க்கத்தினர். It's Hard earned money.
ஏ. ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளில் ஒலி அமைப்பு நன்றாக இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் ஒலி அமைப்பு ஏற்பாடுகள் மோசமாக இருந்தன என பேசப்படுகிறது. குறிப்பாக பின்னால் இருந்தவர்களுக்கு..
இந்த அசம்பாவிதத்திற்கு யார் பொறுப்பு? நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களா? அல்லது ஏ. ஆர். ரஹ்மானா?
ACTC நிறுவனத்தின் அலட்சியம் மற்றும் நிர்வாகத்திறமின்மை காரணமாக ஏற்பட்ட குளறுபடியே இந்த சம்பவம் என்று பேசப்படுகிறது.
காட்டில் பற்றிக்கொண்ட திடீர் நெருப்பு போல இந்த சம்பவம் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சிக்கு சென்று ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் கொந்தளித்துள்ளார்கள்.
நெருப்பை எப்படி தணிப்பது?
இரண்டு விஷயங்கள்...
1. முதலில் ஏ. ஆர். ரஹ்மான் தரப்பிலிருந்தும், ACTC தரப்பிலிருந்தும் மன்னிப்பு அறிக்கை தேவை.
2. இப்போதெல்லாம் QR Code/Scan மூலமாகத்தான் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்/உள்ளே செல்கிறார்கள் . Server Databaseல் இருந்து எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்/உள்ளே சென்றுள்ளார்கள் , எத்தனை பேர் அனுமதிக்கப்படவில்லை/உள்ளே செல்லவில்லை என்கிற Dataவை எடுத்து அனுமதிக்கப்படாத/உள்ளே செல்லாத பார்வையாளர்களுக்கு பணத்தை Refund செய்வதே சாலச் சிறந்தது.
ஆனால் இதில் சோகம் என்னவென்றால், உள்ளே அனுமதிக்கப்பட்டும் டிக்கெட் இருந்தும் பல பார்வையாளர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்திருக்கிறது. பார்வையாளர்கள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் வலிக்கும் வேதனைக்கும் Refund ஓர் ஆறுதலாக அமையும். கோபத்தை சற்று தணிக்கும்.
ACTC has become Popular for wrong reasons. இனி ACTC ஏற்படும் செய்யும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் செல்ல தயங்குவார்கள். நல்ல பெயர் வாங்காவிட்டாலும், கரைப்படாமல் இருக்க ACTC நிறுவனமும், ஏ.ஆர். ரஹ்மானும் கலந்தாலோசித்து பணத்தை Refund செய்ய முன்வருவதே சரியான பிராயச்சித்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
Comments
Post a Comment