வணங்கான்
காது கேட்காத வாய் பேச முடியாத மாற்று திறனாளி கோட்டி(அருண் விஜய்).சிறு வயதில் தனது குடும்பத்தை சுனாமியில் இழந்த கோட்டி, அதே போல தனது குடும்பத்தை சுனாமியில் இழந்த தேவியை (ரிதா) தங்கையாக தத்தெடுத்து வளர்க்கிறார். தேவிக்கு தனது அண்ணன் கோட்டி தான் எல்லாம். அதே போல கோட்டியும் தனது தங்கை மீது மிகுந்த பாசத்தோடு உள்ளார்.
தனது தங்கை மீது பாசமாக இருந்தாலும், தன் முன்னே ஏதேனும் அநியாயம் நடந்தால் தன் கோபத்தை ரவுத்திரம் மூலம் வெளிப்படுத்துகிறார் கோட்டி.
மாற்று திறனாளிகளுக்கான ஆதரவு மையம் ஒன்றில் பணி புரியும் கோட்டி இரண்டு நபர்களை கழுவேற்றி கொல்கிறார் . காவல் நிலையத்தில் சரணடையும் கோட்டி தான் எதற்காக அந்த கொலைகளை செய்தார் என்பதை கூற மறுக்கிறார். மேலும் இன்னொரு கொலையை செய்வேன் என்று கூறுகிறார் கோட்டி .வழக்கு காவல்துறை அதிகாரியான கதிரவனுக்கு(சமுத்திரக்கனி) செல்கிறது. கோட்டி எதற்காக அந்த கொலைகளை செய்தார்? இந்த வழக்கின் பின்னணி என்ன? அதுவே வணங்கான்.
காது கேளாத வாய் பேச முடியாத மாற்று திறனாளியாக அருண் விஜய் நன்றாக நடித்துள்ளார். பாசத்தையும் கோபத்தையும் ரவுத்திரத்தையும் தனது உடல் மொழி மூலம் வெளிப்படுத்தியுள்ளார் அருண் விஜய். One of his Career Best Performance.
தேவியாக ரிதா நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கோட்டிக்கும்( அருண் விஜய்) தேவிக்கும்( ரிதா)இடையிலான காட்சிகள் எமோஷனலாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது.
டீனாவாக ரோஷினி பிரகாஷ் தனது துரு துரு நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.
சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளனர்.
பின்னணி இசை நன்றாக உள்ளது.
கன்னியாகுமரியில் கதை நடக்கிறது. கன்னியாகுமரியை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஆர். பி. குருதேவ்.
பாலியல் குற்றங்கள் குறித்தும் மாற்று திறனாளிகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும் வணங்கான் பதிவு செய்கிறது.
பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிற பொதுவான கருத்து மக்களிடையே உள்ளது. அதனை பிரதிபலிக்கும் விதத்தில் வணங்கான் உள்ளது.
பலவீனம்:
1. பாடல்கள் சுமார்.
2. மாற்று திறனாளிகள் குளிக்கும் காட்சியை படம் பிடித்த விதம் ஆபாசமாகவும் முகம் சுளிக்கும்படியும் இருந்தது.
3.ரோஷினி பிரகாஷ் துறு துறுவென நடித்தாலும் காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. சில காட்சிகள் அபத்தமாக இருந்தன. உதாரணத்திற்கு, கோட்டியை கிண்டல் செய்ததற்கு, கோட்டி டீனாவை ரத்தம் வரும் அளவிற்கு அடிக்கிறார். அதனை டீனா ரசிக்கிறார். கோட்டி மீது காதல் கொள்கிறார். அபத்தமாக இருந்தது.
4. இந்த படத்தை பாலா சுபமாக(Happy ending) முடித்திருக்கலாம். தேவையில்லாமல் தங்கை கதாபாத்திரத்தை சாகடித்துள்ளார். சோகமான கிளைமாக்ஸ் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
5. திரைக்கதையின் போக்கை கணிக்க முடிகிறது.
இயக்குனர் பாலாவின் சிறந்த படைப்பாக வணங்கான் படத்தை கருத முடியாது. ஆனால் பாலா இயக்கிய நல்ல படங்களில் வணங்கான் படமும் ஒன்று.
மொத்தத்தில், அருண் விஜய்க்கு வணங்கான் நல்ல படமாக அமைந்துள்ளது. நன்று.
Maximum Ratings: 3.25 * stars
Minimum Ratings: 3 * stars
Score card: 50 to 40/100
Value: Good to Watchable
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Mounam pole
Irai Nooru
Beautifully penned by Karthik Netha. Beautifully composed by G.V. Prakash.
Madhu Balakrishnan has sung the song beautifully.
Trailer
Director Bala has shown Arun Vijay in a New Angle. Stunts are raw and rustic.
GV Prakash's BGM is Impressive.
Eagerly waiting for Vanangaan.
First look
Comments
Post a Comment