Manjummel boys box

 Manjummel boys Review

மஞ்சுமெல் பாய்ஸ் விமர்சனம்

Language: Malayalam


மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் விமர்சனத்தை எழுத வேண்டும் என்று நினைக்கும் போது குணா குகை, நடிகர் கமல்ஹாசன், குணா படக்குழு மற்றும்  இசைஞானி இளையராஜா குறித்து எழுதாமல் போனால் சரியாக இருக்காது என்று எனக்குப்  பட்டது.


உலகின் மிகவும் ஆபத்தான குகைகளில் ஒன்றுதான் Devils kitchen என்று அழைக்கப்படும் குணா குகை. மிகவும் ஆழமான மற்றும் சீராக இல்லாத குகையாக இருப்பதால் இது மிகவும் ஆபத்தான குகையாக கருதப்படுகிறது.  குகைக்குள் குகை. குழிக்குள் குழி என்று சென்று கொண்டே இருக்கும் இந்த குகை சுமார் 3000 அடி ஆழமானது. பலர் குணா குகையில் விழுந்து இறந்திருக்கிறார்கள்.  குணா குகையில் ஒருவர் விழுந்தால் அவரது பிணத்தை கூட எடுக்க முடியாது என்பதுதான் வரலாறு. 2006ல்  குணா குகையில் 80 அடி ஆழத்தில் விழுந்து ஒரே ஒருவர் மட்டும் உயிரோடு மீண்டிருக்கிறார்.  அதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் மஞ்சுமெல் பாய்ஸ்.

1821 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரியான B.S. Ward இந்த குகைக்கு Devils kitchen என்கிற பெயரை வைத்தார். 1991ல் இந்த பகுதியில் குணா படத்தின் படப்பிடிப்பு நடந்தது. குணா படத்தில் வரும் "கண்மணி அன்போடு" பாடல் Devils kitchen அருகே படமாக்கப்பட்டது. அதற்கு பிறகு இந்த இடம் குணா குகை என்று அழைக்கப்படுகிறது.

மஞ்சுமெல் பாய்ஸ் படம் பார்க்கும் போது நடிகர் கமல்ஹாசன்தான் நினைவுக்கு வந்தார். அவர் குணா படத்திற்காக எடுத்துக்கொண்ட மெனக்கெடல்தான் நினைவுக்கு வந்தது. What a Passionate Actor he is என்றுதான் சொல்ல தோன்றியது. "கண்மணி அன்போடு" பாடலில் "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது" என்று வரும் இடத்தில் அந்த குகை காண்பிக்கப்படும்.
 கரணம் தப்பினால் மரணம் என்றிருக்கும் அந்த இடத்தில் அவர் நடித்திருந்தது showed his Passion and Love for Cinema. Also the Crew of Guna. வெளியான  காலக்கட்டத்தில் குணா விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. விழுந்தால் விதையாக விழு. எழுந்தால் மரமாக எழு என்கிற வாக்கியத்திற்கு ஏற்றார் போல குணா படம் விதையாக விழுந்து  இன்று மஞ்சுமெல் பாய்ஸ் படம் மூலம் மரமாக எழுந்திருக்கிறது.

குணா படம் வெளியான போதே "கண்மணி அன்போடு" பாடல் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் ஈர்க்கும் வகையில் இருந்தது. A Song with conversation என்று சொல்லலாம். முப்பத்து மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் அந்த பாடல் இன்றளவும் பேசப்படுகிறது. அந்த பாடல்  ஒரு மலையாள படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காலத்தை கடந்த இசையாக "கண்மணி அன்போடு" பாடல் நிற்கிறது. Hats off to Isaignani Ilayaraja for his composition and S.Janaki who sang the song along with Kamal Haasan.

சரி விஷயத்துக்கு வருவோம். அது என்ன மஞ்சுமெல் பாய்ஸ்?

கேரளாவில் கொச்சி அருகே இருக்கும் மஞ்சுமெல் டவுன் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் (10 நண்பர்கள்) கொடைக்கானலுக்கு டூர் செல்கிறார்கள். எல்லா டூரிஸ்ட் இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு கடைசியாக குணா குகைக்கு செல்கிறார்கள். குணா குகை தடை செய்யப்பட்ட பகுதி. அது தெரிந்தும் ஆர்வ மிகுதியில் அங்கு செல்கிறார்கள். அப்படி செல்கயிலே அவர்களின் நண்பன் ஒருவன் குணா குகையில் தவறி விழுந்து விடுகிறான். அவனை காப்பாற்ற இந்த நண்பர்கள் போராடுகிறார்கள். தவறி விழுந்த நண்பனை காப்பாற்ற முடிந்ததா? அதுதான் மஞ்சுமெல் பாய்ஸ்.

குணா குகையா...அங்க விழுந்தா அவ்வளவுதான் என்கிற கைவிடும் போக்கையும் அலட்சிய  மனப்பாங்கோடு காவல் துறை, தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இருப்பது குறித்து மஞ்சுமெல் பாய்ஸ் பதிவு செய்கிறது. முதலில் கைவிடும் மனப்பாங்கில் செயல்பட்டாலும் விழுந்த நண்பனை மேலே எடுக்க துடிக்கும் நண்பர்களின் மனப்பாங்கை புரிந்து கொண்டு அவர்களுக்கு காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை உதவ முன் வருகிறது.

குழியில் விழுந்த தனது நண்பன் சுபாஷுக்காக (ஸ்ரீநாத் பசி) குட்டன் (சௌபின் ஷாஹிர்) துடிக்கிறான். இந்த டூருக்கு வருவதற்கு முதலில்  சுபாஷ் தயங்குகிறான். காரணம், அவனிடத்தில் பணம் இல்லை. வா பாத்துக்கலாம் என அவனை சமாதானப்படுத்தி குட்டன்  கொடைக்கானலுக்கு கூட்டி வருகிறான். அவன் அம்மா சுபாஷ் எங்கே என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்? என்று குட்டன் அழுகிறான்.
உள்ளே இறங்க தீயணைப்பு துறை அதிகாரிகளே தயக்கம் காட்டுகிறார்கள். குழியில் சுபாஷின் குரல் கேட்கவே அவனை காப்பாற்ற கயிறோடு குழிக்குள் குட்டன் இறங்குகிறான். நண்பர்கள், காவல்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் என அனைவரும் கயிறை மேலே இழுத்து சுபாஷை காப்பாற்றுகிறார்கள். நட்பு புனிதமானது என்பதை மஞ்சுமெல் பாய்ஸ் பதிவு செய்கிறது. 2006ல் சிஜு டேவிட் என்கிற இளைஞர் குழிக்குள் விழுந்த தனது நண்பனை காப்பாற்ற  தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கயிறு கட்டி கொண்டு குழிக்குள் கீழே இறங்கி  தனது நண்பனை காப்பாற்றினார். அதனை  அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் மஞ்சுமெல் பாய்ஸ். சிஜு டேவிட் கேரளா அரசாங்கத்தால் கெளரவிக்கப்பட்டார். 

சுற்றுலா தளங்களில் தடை செய்யப்பட்ட பகுதியை தாண்டி போவது எவ்வளவு ஆபத்தானது என்பதை மஞ்சுமெல் பாய்ஸ் பதிவு செய்கிறது.குணா குகையின் அழகையும் ஆபத்தையும் மஞ்சுமெல் பாய்ஸ் பதிவு செய்கிறது.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, Production design மற்றும் படத்தொகுப்பு படத்தின் பலம். 

அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். Soubin Shahir, Sreenath Bhasi and others have performed well naturally. 

கொடைக்கானலை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சைஜு காலித். 

குணா குகை set work/Production design தத்ரூபமாக இருந்தது.

Tug of war gameஐ இயக்குனர் திரைக்கதையில் நன்றாக கனெக்ட் செய்திருந்தார். 

சுபாஷ் குழிக்குள் விழும் காட்சி நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. 

நிஜத்தில் இது போன்ற ஓர் சம்பவம் நடந்தால் சுற்றியுள்ளவர்கள் எப்படி ரியாக்ட் ஆவார்களோ அது போன்ற ரியாக்ஷன்சை நடிகர்கள் இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார்கள். 
 உதாரணத்திற்கு, சுபாஷ் கீழே விழுந்தவுடன் பித்து பிடித்தது போல் உட்காரும்  நண்பன் அதற்கோர் உதாரணம். 

ஜார்ஜ் மரியான்,கதிரேசன்,  ராமச்சந்திர துரைராஜ் & விஜயமுத்து  போன்றோர் தங்களது கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளார்கள். 

மலையாளமும் தமிழும் கலந்த படமாக மஞ்சுமெல் பாய்ஸ் இருக்கிறது. 

"கண்மணி அன்போடு" பாடல்  படத்தில் சரியாக அழகாக place செய்யப்பட்டிருந்தது. 

இந்த சம்பவத்தால் ஏற்படும் Post Traumatic Stress Disorder பற்றியும்,  ஷிஜு டேவிட் கேரள அரசால் கௌரவிக்கப்பட்டதை பற்றியும் மஞ்சுமெல் பாய்ஸ் பதிவு செய்கிறது. 

குட்டனுக்கும் சுபாஷ் அம்மாவிற்கும் இடையிலான உரையாடல்கள் இயல்பாகவும், உண்மை தெரிந்து குட்டனுக்கு சுபாஷ் அம்மா  நன்றி சொல்லும் காட்சி எமோஷனலாக கனெக்ட் ஆனது. 

பலவீனம்: 

1. Visual effects could have been better 
2. முதல் 20 நிமிடங்கள் Gripping ஆக இல்லை. கதைக்கு செல்ல சிறிது நேரம் எடுக்கிறது. 

என்னதான் OTT இருந்தாலும்,மொழி கடந்து நல்ல படங்களை காண பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என்பதற்கு மஞ்சுமெல் பாய்ஸ்  திரைப்படம்  ஓர் உதாரணம்.  

Overall, a Well made Film on a Low budget!!!

Maximum Ratings: 3.75 * stars
Minimum Ratings: 3.5 * stars
Score card: 70 to 60/100
Value: Excellent to Very Good 

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre




Comments