Water Packet video song
A Beautiful song that has been beautifully Picturised.
Adangatha Asuran Video song
Good Cinematography. Nice picturisation. Beautiful song.
ராயன் விமர்சனம்
காலங்கள் செல்கின்றன. தற்போது காத்தவராயன் (தனுஷ்) சிற்றுண்டி உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். முத்துவேல் ராயன் (சந்தீப் கிஷன்) வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக காலத்தை கழிக்கிறார். குடிக்கிறார். அவ்வப்போது ஏதேனும் தகராறில் ஈடுபடுகிறார். மேகலாவை (அபர்ணா பாலமுரளி) காதலிக்கிறார். மாணிக்கவேல் ராயன் கல்லூரியில் படிக்கிறார்.
ராயன் வசிக்கும் பகுதியில் இரண்டு gangs இருக்கின்றன. துரை (சரவணன்) gang மற்றும்
சேது (எஸ்.ஜே. சூர்யா) gang. இரண்டு gangs இடையே பகை இருக்கிறது. சேதுவின் அப்பாவை துரை கொன்றதால் சேதுவுக்கும் துரைக்கும் ஒரு விதமான cold war இருக்கிறது. இருந்தாலும் இவர்களுக்குள் ஒரு விதமான mutual understanding இருக்கிறது. துரையை சமயம் பார்த்து போடலாம் என காத்திருக்கிறார் சேது.
சிட்டிக்கு புதிதாக வந்த கமிஷனர் சர்குணம் (பிரகாஷ் ராஜ்) இந்த இரு குழுக்களையும் முடிக்க நினைக்கிறார். இரு குழுக்களுக்கு இடையே பகையை தூண்டிவிட்டு இவர்களை முடிக்கலாம் என திட்டம் தீட்டுகிறார்.
ஒரு நாள் பாரில் குடித்துவிட்டு தகராறு செய்யும் முத்துவேல் ராயன் குடி போதையில் துரை மகனை போட்டு தள்ளுகிறார். இது தெரிந்த துரை காத்தவராயனுக்கு போன் செய்து முத்துவேல் ராயனை பலி கேட்கிறார்.
ராயன் ஒரு வீரன். "நான் ரவுடி நான் ரவுடி" என்று பந்தா காட்டிக்கொள்ளாமல் விளம்பரப்படுத்திக்கொள்ளாமல் தேவைப்படும் போது தனது வீரத்தை வெளிப்படுத்துபவர் . தனது குடும்பத்துக்கு பாதுகாவலனாக இருக்கிறார். தனது தம்பிக்கு பிரச்சனை...அவர் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன் தனது வீரத்தை வெளிப்படுத்துகிறார். தனது தம்பிகளோடு சென்று துரை ஆட்களையும் துரையையும் சைலண்டாக முடிக்கிறார்.
ராயன்தான் துரையை கொன்றார் என்பது யாருக்கும் தெரியாது. துரை இறந்ததால் அவரை சேதுதான் முடித்திருப்பார் என்று ஏரியாவில் மக்கள் பேசி கொள்ள சேதுவின் கை ஏரியாவில் ஓங்குகிறது. தனது கை ஏரியாவில் ஓங்கினாலும் உண்மையில் துரையை யார் கொன்றது? அது யார் என்பதை தெரிந்து கொள்ளாமல் போனால் எங்கே கொன்றவனது கை ஓங்கிவிடுமோ என்கிற அச்சமும் சேதுவிடம் இருப்பதால் கொன்றது யார் என்பதை தெரிந்து கொள்ள உளவு பார்க்கிறார். ஒரு கட்டத்தில் ராயன்தான் கொன்றார் என்பது தெரிய வருகிறது. தன்னுடைய gangல் இணையுமாறு ராயனுக்கு கட்டளையிடுகிறார். ராயன் அதனை மறுக்கிறார்.
ராயனை தனது வழிக்கு கொண்டு வர சில காரியங்களை செய்கிறார் சேது. நிச்சயமான ராயன் தங்கையை கடத்துகிறார். ராயனது தம்பிகளான முத்துவேல் ராயன் மற்றும் மாணிக்கவேல் ராயனிடம் கபட நாடகம் ஆடி மூளை செலவு செய்து தன்னுடைய gangல் சேர்க்கிறார் . ராயனுக்கு எதிராக தம்பிகளை திருப்பி விடுகிறார். ஒரு கட்டத்தில் தம்பிகள் ராயனை கத்தியால் குத்தி கொல்ல முயலுகின்றனர். ராயனுக்கு துரோகம் செய்கின்றனர். ராயன் குத்து பட்டு விழுகிறார். தங்கை கற்பழிக்கப்படுகிறார். இது தம்பிகளுக்கு தெரியாமல் போகிறது.
தனது அண்ணனான ராயனை துர்காவும் சேகரும் காப்பாற்றுகின்றனர். இந்த சம்பவங்களிலிருந்து மீண்டு வரும் ராயன் சேதுவை பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். சேதுவின் இரண்டாவது மனைவியை கடத்தி விடுவிக்கிறார். தன்னை கற்பழித்தவனை துர்கா பழி வாங்குகிறார். (அந்த காட்சி நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியில் துஷாரா விஜயன் நன்றாக நடித்துள்ளார்). சேகரை சேது கொல்கிறார்.
ராயன்தான் துரையை கொன்றார் என்பதையும் ராயனுக்கும் சேதுவுக்கும் பகை இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளும் காவல்துறை அதிகாரி சர்குணம் இருவரையும் compromise செய்து கொண்டு சமாதானமாக போக சொல்கிறார். அதற்காக ஒரு திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது. திருவிழாவில் சேதுவை வதம் செய்கிறார் ராயன். சேதுவை மட்டுமின்றி தனது தம்பி முத்துவேல் ராயனையும் போட்டு தள்ளுகிறார். சமாதானம் பேச வரும் போது மாணிக்கவேல் ராயன் தான் செய்த துரோகத்துக்கு மன்னிப்பு கேட்கிறார். அதனால் ராயன் அவரை மன்னிக்கிறார். ஆனால் மாணிக்கவேல் ராயன் தனது அண்ணனை கத்தியால் குத்தியதை ஏற்று கொள்ளாத துர்கா மாணிக்கவேல் ராயனை குத்தி கொல்கிறார்.
முத்துவேல் ராயனால் கர்ப்பமாகும் மேகலா, அவருக்கு பிறந்த குழந்தையை ராயனிடமும் துர்காவிடமும் விட்டு செல்கிறார். ராயனும் துர்காவும் அங்கிருந்து தப்பித்து வேறு ஊருக்கு செல்கின்றனர்.
An engaging Gangster movie with Twists and Turns!!! A Gangster movie with Mass elements!!!
Raayan takes you through Brotherhood, Deception, Betrayal and Revenge.
Dhanush, SJ Suryah, Dhushara Vijayan, Sundeep Kishan, Aparna Balamurali, Kalidas Jayaram, Selvaraghavan, Prakash Raj, Saravanan and Varalakshmi are key performers.
Chemistry between Aparna Balamurali and Sundeep Kishan was Good.
சில காட்சிகளே வந்தாலும் வரலட்சுமி ஸ்கோர் செய்கிறார்.
A.R. Rahman's Music is a Big strength and Plus for Raayan.
A Huge setwork has been erected for the movie that looks natural reflecting a slum. Excellent Artwork/Production Design!!!
Raw and Rustic...Stunts have been made well.
Cinematography is Good.
பலவீனம்:
1. இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு மேல் கதையின் போக்கை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.
2. தனது அண்ணன் மீது மிகுந்த மதிப்பை வைத்திருக்கும் தம்பிகள் அவருக்கு துரோகம் செய்கிறார்கள். அதற்கான காரணங்கள் (reasoning) திரைக்கதையில் வலுவாகவோ அல்லது ஆழமாகவோ இல்லை. அது படத்தின் பலவீனம்.
Overall, an engaging Gangster movie with Twists and Turns!!!
Maximum Ratings: 3.5 *stars
Minimum Ratings: 3.25 * stars
Score card: 60 to 50/100
Value: Very Good to Good
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
O Raaya
There is a sense of soul, feel and depth in A.R. Rahman and Ganavya Duraisamy's voice.
Trailer
Looks like Dhanush and SJ Suryah are going to Face off each other in Raayan. Dhanush and SJ Suryah is an interesting combination.
Raayan Rumble
Water packet
A Romantic Gana song from A.R.Rahman. Santhosh Narayanan and Shwetha Mohan have sung the song well.
Adangaatha Asuran
Dhanush has penned the lyrics well. A song with Rythmic beats. A.R.Rahman and Dhanush have sung the song well.
First look
First look of Raayan.
50th Film of Dhanush.
Directed by Dhanush himself.
Music by A.R. Rahman.
Produced by Sun Pictures.
Comments
Post a Comment