Garudan box

 கருடன் 

விமர்சனம் 


கோம்பை கோவிலுக்கு சொந்தமான சுமார் முன்னூற்று முப்பது கோடி ருபாய் மதிப்புடைய நிலத்தை அமைச்சர் (ஆர். வி. உதயகுமார்)  ஒருவர் கைப்பற்ற நினைக்கிறார். அந்த நிலத்தை அடைய அவருக்கு கோம்பை கோவிலின் செம்பட்டையம் தேவைப்படுகிறது. அந்த செம்பட்டையம் ஆதி(சசிகுமார்) மற்றும் கருணா (உன்னி முகுந்தன்) பாதுகாப்பில் இருக்கிறது. ஆதியும் கருணாவும் நெருங்கிய நண்பர்கள். கோம்பை கோவிலின் நிர்வாக பொறுப்பில் இருக்கிறார்கள். கருணாவின் விஸ்வாசியாக சொக்கன் (சூரி) இருக்கிறான் . அந்த செம்பட்டையத்தை அடைய நாகராஜை (மைம் கோபி) நியமிக்கிறார் அமைச்சர். ஆதியும் கருணாவையும் கடந்து அமைச்சரால் செம்பட்டயத்தை அடைய முடிந்ததா? ஆதி கருணாவின் நட்பு என்ன ஆனது? ஆதிக்கு என்ன ஆனது? கருணாவின் அப்பத்தாவுக்கு என்ன ஆனது?  கருணாவின் உண்மை முகத்தை சொக்கன் புரிந்து கொண்டானா? சொக்கனின் விஸ்வாசம் என்ன ஆனது?   அமைச்சரின் சதி வெளிச்சத்திற்கு வந்ததா? அதுவே கருடன்.


 விஸ்வாசமாக இருக்கும் ஒருவரை நாயாக பார்ப்பதற்கும், குடும்பத்தில் ஒருவராக கருதுவதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது. நியாயமா விஸ்வாசமா என்கிற பெரும் கேள்வி எழும் போது நியாயத்தை சொக்கன் தேர்வு செய்கிறான்.  சொக்கனின் இறுதி முடிவு பார்வையாளர்களுக்கு நியாயமாகப்படுகிறது . அதுவே இந்த படத்தின் வெற்றி.

கோவில் சொத்து...நட்பு... துரோகம்... விஸ்வாசம்...Revenge... இதனை சுற்றி நடக்கும் கதை.

சூரி திறம்பட நன்றாக நடித்துள்ளார்!!!
நடந்தது என்ன என்பதை விஸ்வாசத்தோடு மூச்சு விடாமல்  எடுத்து கூறும் காட்சிகளில்  ஸ்கோர் செய்கிறார். ஆதியின் இறப்புக்கு காரணமானவர்களை பழி வாங்கும் போது ஸ்கோர் செய்கிறார்.  
விஸ்வாசத்திற்கும் நியாயத்திற்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் சொக்கன் கதாபாத்திரத்தில் சூரி நன்றாக நடித்துள்ளார். இன்டெர்வல் காட்சி, ஆதி இறப்பிற்கு காரணமானவர்களை பழி வாங்கும் காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ். படத்தின் ஹைலைட்.
விடுதலை படத்தை தொடர்ந்து சூரிக்கு நல்ல படமாக கருடன் அமைந்துள்ளது !!! 

"செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு " என்கிற குறளுக்கு ஏற்றார் போல் நல்ல நண்பராக ஆதி கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். அவர் இறக்கும் காட்சி சோகத்தை ஏற்படுத்துகிறது. 

ஆதியின் நட்பை புரிந்து கொள்ளாமல் போவது...அவருக்கு  துரோகம் செய்வது... வெறுப்பு, பொறாமை மற்றும் சுயநலம் கொண்ட கருணா கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நன்றாக நடித்துள்ளார் 

சசிகுமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர். வி. உதயகுமார்,சமுத்திரக்கனி, ஷிவடா, ரோஷினி ஹரிப்ரியன், ரேவதி சர்மா மற்றும் வடிவுக்கரசி தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளார்கள். 

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை பலம்!!! 

ஒளிப்பதிவு பலம்.

சண்டை காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளன.

திரைக்கதையை நன்றாக நகர்த்தியுள்ளார் இயக்குனர் R.S. துரை செந்தில்குமார்

கதையின் போக்கை இரண்டாம் பாதியில் ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

மொத்தத்தில் சூரிக்கு நல்ல படமாக கருடன் அமைந்துள்ளது!!!

Maximum Ratings: 3.5 * stars
Minimum Ratings: 3.25 * stars
Score card: 60 to 50/100
Value: Very Good to Good 

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre

Comments