Parking box

 Parking Review

Digital platform: Disney+ Hotstar


Eshwar(Harish Kalyan) an IT engineer moves as a tenant to a Home along with his pregnant wife Aathika(Indhuja) ...He lives in upper portion...In the down portion lives Ilamparuthi(M.S. Bhaskar), a Government employee along with his family... Eshwar family and Ilamparuthi family become neighbours and  friends...However things take a turn and ego clashes start to arise between Eshwar and Ilamparuthi for a parking problem...Where does it lead to? That's Parking.

Director gradually heats up things in the Screenplay...Screenplay is Engaging and Gripping!!! 

How cheap and low someone can go when their ego is hit...Parking addresses...

ஏட்டிக்கு போட்டி... நீயா நானா என்னும் ஈகோ...அதனால் வெடிக்கும் பிரச்சனை. அதனை தொடர்ந்து ஒருவரை ஒருவர் பழி வாங்கும் அளவிற்கு செல்வது... முடிவில் நீ உயிரோட இருக்கனும் இல்ல நான் உயிரோட இருக்கனும் என்கிற நிலைக்கு  இருவரும் செல்வது... முடிவில் இருவரும் மன்னிப்பு கேட்டு கொள்வது. Neighborhoodல் ஒருவருக்கொருவர்  விட்டு கொடுத்து போவதன் முக்கியத்துவத்தை பார்க்கிங் பதிவு செய்கிறது. 

பணத்தை சேமிக்க வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட கஞ்சனாக வாழும் இளம்பரிதி ஈஸ்வருக்கு ஏட்டிக்கு போட்டியாக கார் வாங்குவது, ஈஸ்வர் காரை வெளியே எடுக்க வேண்டும் என்பதற்காக மோட்டாரை ரிப்பேர் செய்வது, ஈஸ்வர் காரை தனக்கு முன்பு நிறுத்தி விட்டதால் கார் கண்ணாடியை கல்லால் அடிப்பது,  வாக்குவாதத்தில் தகாத வார்த்தையை பேசி ஈஸ்வரிடம் அறை வாங்குவது, வீட்டு வாசலில் அனைவரும் முன்பு அவமானப்பட்டு நிற்பது, அவமானப்பட்டதால் ஈஸ்வரை பழி வாங்க ஈஸ்வர் தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக  பொய்யான ஓர் complaintஐ போலீஸ் ஸ்டேஷனில்  கொடுப்பது, ஈஸ்வரின் கார் டயரை லூஸ் செய்வது, கோபத்தில் ஈஸ்வரை கொல்ல முயற்சித்து அவரை கண்ணாடியால் அடித்து கொல்ல முயற்சிப்பது என ஓர் egotist  கதாபாத்திரத்தை நம் கண் முன் தனது நடிப்பால் கொண்டு வருகிறார் எம். எஸ். பாஸ்கர்.  ஈஸ்வரோடு  பகை இருந்தாலும் ஆதிகா பிரசவ வலியில் துடிக்கும் போது அவரை மருத்துவமனையில் அனுமதித்து மனிதம் காக்கிறார் இளம்பரிதி. One of the Career Best Performance of M.S. Bhaskar!!!

வயதானவர் என்பதற்காக விட்டு கொடுத்து போக முயல்வது, ஏட்டிக்கு போட்டியாக இளம்பரிதி கார் வாங்கியவுடன் தனது காரை அவர் வருவதற்குள் வீட்டின் உள்ளே விட்டு விட முயற்சிப்பது, வாக்கு வாதத்தில் இளம்பரிதியை அறைவது, போலியான complaint ஐ இளம்பரிதி கொடுத்ததால் அவரை பழி வாங்க அவர் அலுவலகத்திற்கு சென்று அவருக்கு தெரியாமல் பண கவரை வைத்து விட்டு பின்பு லஞ்ச ஒழிப்பு துறையிடம் இளம்பரிதி லஞ்சம் வாங்கி விட்டதாக கூறி அவர் சஸ்பெண்ட் ஆவதற்கு காரணமாவது, இளம்பரிதி கார் டயரை லூஸ் செய்ததால் அதற்கு பழி தீர்க்கும் வகையில் அவரின் கார் கண்ணாடியை கிரிக்கெட் பேட்டால் அடித்து உடைப்பது, இளம்பரிதியிடம் சமாதானம் பேச போவது, அங்கு நடக்கும் சம்பவத்தினால் இளம்பரிதியை கொல்ல முயல்வது, முடிவில் நன்றியும் மன்னிப்பும் கேட்பது என Equally, Harish Kalyan has performed well!!!

நகரங்களில் இருக்க கூடிய parking பிரச்சனை குறித்து parking பதிவு செய்கிறது.

Generation gap, Difference of opinion and Comparative mindset காரணமாக எழும் சிக்கல்களை பார்க்கிங் பதிவு செய்கிறது. நேர்மையாக இருக்கும் இளம்பரிதியிடம் அவரது மனைவி அடுத்தவரோடு இளம்பரிதியை ஒப்பீட்டு பேசும் காட்சிகள் அதற்கோர் உதாரணம்... இளம்பரிதியின் ஈகோவை தூண்ட சுற்றத்தாரும் ஒரு வகையில் காரணம் என்பதை படம் பார்க்கும் போது நாம் உணர்கிறோம்... 

இவர் நல்லவர் இவர் கெட்டவர் என்று காட்டாமல் ஈகோவை வில்லனாக காட்டியதுதான் படத்தின் பலம்!!!

Good chemistry between Harish Kalyan and Indhuja. Indhuja has performed her part  well.

Rama Rajendra, Prathana Nathan, Ilavarasu and others have performed their roles well. 

Sam C.S. பின்னணி இசை நன்றாக இருந்தது.

கதைக்கேற்ற ஒளிப்பதிவை கொடுத்துள்ளார் Jiju Sunny. 

பிலோமின் ராஜின் படத்தொகுப்பு நன்று!!!

சில இடங்களில் சினிமாத்தனம் இருந்தது..உதாரணத்திற்கு காரை யார்  முன்னே பார்க் செய்வது என்கிற ஈகோ போட்டியில் இருவரும் அவரவர் வேலையை பாதியில் விட்டுவிட்டு வீட்டிற்கு செல்லும் காட்சி அதற்கோர்  ஓர் உதாரணம்...

Overall an Engaging Gripping Screenplay from Director Ramkumar Balakrishnan!!!

Maximum Ratings: 3.75 * stars

Minimum Ratings: 3.5 * stars 

Score card: 70 to 60/100

Value: Excellent to Very Good 

Rating structure: 

Rating stars (*****)

Score card

Value

5* stars

100

Fantastic

4.5* stars

90

Awesome

4* stars

80

Outstanding

3.75* stars

70

Excellent

3.5* stars

60

Very Good

3.25* stars

50

Good

3* stars

40

Watchable

2.75* stars

30

Middling

2.5* stars

20

Mediocre


Comments