அன்புள்ள இயக்குனர் சிவா அவர்களுக்கு,
வணக்கம்!!!
கங்குவா படம் குறித்து கடிதம் எழுத வேண்டுமென நினைத்தேன். எழுதுகிறேன்.
பலம்:
1. வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவு பலம்
2. 1070ல் நடக்கும் காட்சிகளுக்கான ஆடை வடிவமைப்பு பலம்
3. 1070ல் நடக்கும் காட்சிகள் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. 1070ல் வரும் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக படமாக்கப்பட்டுள்ளன.
4. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை பலம்.
5. ரத்தாங்கேசனாக வரும் கார்த்தியின் அறிமுக காட்சி பலம்
6. Commander Ryan மற்றும் Francis, கங்குவா மற்றும் ரத்தாங்கேசன் மோதி கொள்ள போகிறார்கள். அது இரண்டாம் பாகமாக வெளிவரும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது பலம். சூர்யாவும் கார்த்தியும் இணைந்து எப்போது ஒன்றாக நடிக்க போகிறார்கள் என்கிற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இரண்டாம் பாகம் வரலாம் என்கிற எதிர்பார்ப்பை கங்குவா ஏற்படுத்தியுள்ளது .
7. கங்குவாவாக சூர்யா நன்றாக நடித்துள்ளார்.
8. சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் போஸ் வெங்கட் மற்றும் நடராஜன் நன்றாக நடித்துள்ளனர். நரித்தனத்தின் மொத்த உருவமாக மியாசன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.. அவர்களது இருவரின் கதாபாத்திரமும் 30 வெள்ளி காசுகளுக்காக இயேசுவை காட்டிக்கொடுத்த ஜூடாஸை நினைவுப்படுத்தியது .
பலவீனம்:
1. முதல் 20ல் இருந்து 30 நிமிடங்கள் சொதப்பல். Francis ஆக வரும் சூர்யாவின் காட்சிகள் ஒட்டவில்லை.
2. Flashback முடிந்து வரும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி அபத்தமாக இருந்தது. இரண்டு குண்டுகள் துளைத்தும் Francis சர்வசாதாரணமாக ஓடுகிறார். விமானத்தின் நுனியில் நின்று கொண்டு குழந்தையை காப்பாற்ற முற்படுகிறார். முடிவில் காப்பாற்றுகிறார். It was absurd and wasn't convincing.
3. பெருமாச்சி இனத்தையே தங்க காசுகளுக்காக அழிக்க நினைத்த துரோகியின் மகனை கங்குவா ஏன் காப்பாற்ற வேண்டும்? அதற்கான காட்சிகள் பலமாக இல்லாதது படத்தின் மிக பெரிய பலவீனம். கொடுவனின் மனைவிக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக அவரது பிள்ளையை கங்குவா காக்கிறார் என்கிற லாஜிக் ஓகேதான் என்றாலும், துரோகியின் மனைவிக்கு கங்குவா எதற்காக சத்தியம் செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. துரோகியின் மகனிற்கு கங்குவா பாசம் காட்டுகிறார். ஒட்டவில்லை. ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. முதல் 30 நிமிடங்கள் சொதப்பலாக இருந்தாலும், கடைசி இருபது நிமிடங்கள் அபத்தமாக இருந்தாலும் படத்தின் மையக்கரு பலமாக இருந்திருக்க வேண்டும். படத்தின் மையக்கரு பலவீனமாக இருக்கிறது. அதுதான் கங்குவா படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
4. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் கே.எஸ். ரவிக்குமார் போன்ற திறமையான கலைஞர்கள் சரியாக பயன்படுத்தப்படாதது படத்தின் பலவீனம்.
5. திஷா பட்டானியின் கதாபாத்திரம் ஒட்டவில்லை.
6. உதிரனாக வரும் பாபி டியோலின் கதாபாத்திரம் வலுவாக வடிவமைக்கப்படவில்லை.
Maximum Ratings: 3 * stars
Minimum Ratings: 2.75 * stars
Score card: 40 to 30/100
Value: Watchable to Middling
Rating structure:
Rating stars (*****) | Score card | Value |
5* stars | 100 | Fantastic |
4.5* stars | 90 | Awesome |
4* stars | 80 | Outstanding |
3.75* stars | 70 | Excellent |
3.5* stars | 60 | Very Good |
3.25* stars | 50 | Good |
3* stars | 40 | Watchable |
2.75* stars | 30 | Middling |
2.5* stars | 20 | Mediocre |
Comments
Post a Comment